"புதிய சிங்கள அமைப்பு உருவாக்கம்" தலைவர் தினேஷ், செயலாளர் பீரிஸ், தேசிய அமைப்பாளர் விமல்
கலப்பு போர்க் குற்ற நீதிமன்றத்தை ஏற்படுத்தும் ஜெனிவா யோசனைக்கு அரசாங்கம் இணங்கியதால், ஏற்பட்டுள்ள பாரதூரமான ஆபத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் நோக்கில் தாய் நாட்டை பாதுகாக்கும் தேசிய அமைப்பு என்ற பெயரில் புதிய சிங்கள அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு நாராஹேன்பிட்டியில் உள்ள அபயராம விகாரையில் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தேசிய அமைப்பு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முருத்தோட்டுவே ஆனந்த தேரர், பேராசிரியர் இந்துராகரே தம்மரத்ன தேரர், பொங்கமுவே நாலக தேரர், கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர், கிறிஸ்தவ பேதகர் சரத் ஹெட்டியாராச்சி ஆகியோர் இந்த அமைப்பின் ஆலோசகர்களாவர்.
அமைப்பின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, செயலாளராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த அமைப்பின் கலாசார விவகார செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் நிர்வாக செயலாளராக கேவிந்து குமாரதுங்கவும் பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாய் நாட்டை பாதுகாக்கு தேசிய அமைப்பு நாடு முழுவதும் மாநாடுகளை நடத்த தீர்மானித்துள்ளது.
நாடு எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தில் இருந்து நாட்டை பாதுகாத்துக் கொள்ள தமது அமைப்புடன் கைகோர்த்துக் கொள்ளுமாறு இந்த அமைப்பினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

My3 allowed Mahinda to contest parliamentary election from UPFA and Mahinda
ReplyDeletejacked up the junks to win seats to the legislature and now My3 and Ranil must
face the music.