ஞானசாரரை பிடிக்குமாறு, பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு
வழக்கு விசாரணைக்கு ஆஜராகமையையடுத்து பொதுபல சேனா அமைப்பின் செய்லாளர் கலகொடஅத்தே ஞானசாரா தேரர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்யுமாறு புறக்கோட்டை நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புனித குரானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் ஜாதிக பலசேன அமைப்பின் ஊடகவிலயாளர் சந்திப்பிற்கு தடையேற்படுத்தியமை தொடர்பில் ஞானசார தேரர் உட்பட குழுவினருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தன.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றில் வழங்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று அழைத்திருந்த போதிலும் இவர்கள் ஆஜராகமையையடுத்து நீதிமன்றில் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை நீதவான் பிரியந்த லியனகேவினால் குறித்த வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இவனை பிடித்து. உள்ள போட இன்னும் காலம் இருக்க?
ReplyDeleteசகோதரர்களே இவன் கைது செய்யப்படக் கூடாது காரணம் இந்த நாய் கைது செய்யப்பட்டால் இவன் பிரபலமாவதற்குச் சந்தர்ப்பமாக அமைந்து விடும் இவன் அவமானப்படுத்தப்பட்டு ஓரங்கட்டப்படல் வேண்டுமே அன்றி இவன் பிரபலமாவது எமக்கு பாதிப்பாக அமையூம் அல்லாh முஸ்லிம்களையூம் இஸ்லாத்தையூம் பாதுகாப்பானாக
ReplyDelete