Header Ads



ஏறாவூரில் பிடிபட்ட 20.000 கிலோ பாறை மீன்கள் (படங்கள் இணைப்பு


ஏறாவூர் பிரதேச சவுக்கடி கடலில் கடந்த இரு தினங்களில் மீனவர் இருவரின் கரைவலைகளில் சுமார் இருபதாயிரம் கிலோ கிராம் எடைகொண்ட ஆயிரத்தைந்நூறு பாரை மீன்கள் சிக்கியுள்ளன.

இந்த மீன்கள் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியானவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்வையிட பலர் கடற்கரையில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏறாவூரைச் சேர்ந்த என்.எம்.எம். ஷபீக் மற்றும் எஸ். சுதாகரன் ஆகியோரது  கரைவலைகளிலேயே இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிக்கப்பட்டிருந்தது.

அண்மைக்காலமாக கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கடல் மீன்கள் குறைவாகவே பிடிபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.