ஜனாதிபதி மாளிகையில், அதிசொகுசு நிலக்கீழ் மாளிகை
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிசொகுசு நிலக்கீழ் மாளிகையொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்தியுள்ளார்.
சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றுக்காக வருகை தந்திருந்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உண்மையைப் போட்டுடைத்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையை பார்வையிடும்போது நிலக்கீழ் சொகுசு மாளிகையையும் பார்வையிட மறக்க வேண்டாம் என்றும் அவர் மாணவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலக்கீழ் மாளிகைக்கு 24 மணிநேரமும் துண்டிக்கப்பட முடியாத வகையில் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை ராஜபக்ஷவினரே நிர்மாணித்துள்ளனர்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மாளிகையின் மாதாந்த மின் கட்டணம் ஒன்றரைக்கோடி செலவாகின்றது. அதில் நிலக்கீழ் மாளிகையின் மின் செலவு மட்டுமே முப்பது லட்சம் செலவாகின்றது.
இதன் காரணமாகவே நான் வேறொரு சாதாரண வீட்டை உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்துகின்றேன். எனது தற்போதைய இல்லத்தின் மொத்த பராமரிப்புச் செலவே மாதாந்தம் ஐந்து லட்சம் மட்டுமே செலவாகின்றது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Post a Comment