Header Ads



"நாய்குட்டியை விளையாட அனுமதிக்கவில்லை" 8 வயது சிறுமியை, சுட்டுக்கொன்ற 11 வயது சிறுவன்

நாய்குட்டியை தன்னுடன் விளையாட அனுமதிக்கவில்லை என்பதற்காக, சிறுவன் ஒருவன், 8 வயது சிறுமியை சுட்டுக் கொன்றுள்ளான்.
 
அமெரிக்காவில் இடம்பெற்றுள்ள இந்த அதிர்ச்சி மிக்க சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு 11 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவைச் சேர்ந்த லடாசா டயரின் மகள் மெகய்லா (8) என்பவரே இச்சம்பவத்தில் பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
 
இரண்டாம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுமி கடந்த சனிக்கிழமை (03) அவர்களின் வீட்டின் அருகே வசித்துவரும் 11 வயது சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, அதே பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன், மெகய்லா வீட்டிலுள்ள குட்டி நாயைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறான். அதற்கு அந்த சிறுமி மறுத்துவிட்டாள்.
 
இதனால் கோபமடைந்த அந்தச் சிறுவன் அவனின் வீட்டிற்குச் சென்று அவனது தந்தையின் கைத்துப்பாக்கியை கொண்டு வந்து அந்தச் சிறுமியை சுட்டுள்ளான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் மெகய்லா சம்பவ இடத்திலியே பலியாகிய தெரிவிக்கப்படுகின்றது.
 
காவல்துறைக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறை அந்த சிறுவனை கைது செய்துள்ளதோடு, இது குறித்து அவரது தந்தையையும் விசாரித்து வருகின்றது.

No comments

Powered by Blogger.