Header Ads



அதிக குழந்தைகளை பெற்ற தம்பதிக்கு ரூ.72 லட்சம் அபராதம்

சீனாவில், அரசு விதிமுறையை மீறி, ஏழு குழந்தைகளை பெற்ற தம்பதிக்கு, 72 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பு) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சீனாவில், 'ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை' திட்டம் அமலில் உள்ளது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அபராதம், கூடுதல் வரி ஆகியவற்றை செலுத்த வேண்டும். இதற்கெல்லாம் அஞ்சாத ஒரு தம்பதி, 1984 முதல், வரிசையாக, ஏழு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது.

சீன குடிமகன்களுக்கு, 'ஹுக்கா' என்ற அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டை இருந்தால் மட்டுமே இலவச கல்வி, மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். அதனால், அந்த தம்பதியின் குழந்தைகளில், மூத்தவன் ஜங் ஜிலாங்கை தவிர, மற்ற ஆறு பேருக்கும், அரசு சலுகைகள் கிடைக்கவில்லை.

ஜங் ஜிலாங் கூட, சீன அரசின் கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ், ஒன்பது ஆண்டுகள் மட்டுமே படிக்க முடிந்துள்ளது. ''போதிய படிப்பு இல்லாததால், நல்ல வேலைக்கு செல்ல முடியாமல், கிடைத்த வேலையை செய்து வருகிறேன்,''  என்கிறார் ஜங் ஜிலாங்.

இவரது இளம் தங்கைக்கு, ஹுக்கா இல்லாததால், திருமணச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இவருக்கு பிறந்த குழந்தைகளுக்கும் இதே சோகம் தொடர்கிறது. ''ஹுக்கா இல்லாததால், என் தங்கையை, மைத்துனர் விவாகரத்து செய்து விட்டார்; இப்போது, அவள் மன அழுத்தத்தில் தவிக்கிறாள்,'' என்கிறார், ஜங் ஜிலாங்.

''ஒரே குடும்பத்தில், ஏழு பேருக்கு நேர்ந்த இந்த கொடுமைக்கு, பெற்றோர்தான் பொறுப்பு,'' என்கிறார், ரென்மின் பல்கலை பேராசிரியர் ஹு டோங்மின்.

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி, ஏழு குழந்தைகளை பெற்ற தம்பதிக்கு, 72 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 

1 comment:

Powered by Blogger.