Header Ads



இலங்கை கமாண்டோ படைப்பிரிவின், மேஜர் 7000 அடி தூரத்திலிருந்து குதித்து சாதனை


இலங்கை கமாண்டோ படைப்பிரிவின் மேஜர் ஒருவர் பத்தாயிரம் அடி உயரத்தில் பாரசூட்டை விரிக்காமல் வானிலிருந்து குதித்து, 7000 அடி தூரத்தை 42 செக்கன்களில் கடந்து சாதனை புரிந்துள்ளார்.

இலங்கை கமாண்டோ படையணியின் மேஜர் சுஜித் சிரஞ்சீவ என்பவரே இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அம்பாறையில் இன்று (2) நடைபெற்ற கமாண்டோ படையணியின் சாகசக் கண்காட்சியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதித்த மேஜர் சுஜித் ஒரு பக்கம் தேசியக் கொடியும், மறுபக்கம் கமாண்டோ படையணிக் கொடியும் ஒட்டப்பட்ட கொடியைத் தாங்கிக் கொண்டு வானில் கரணமடித்தபடி 7000 அடி தூரத்தை கடந்திருந்தார்.

மணித்தியாலத்துக்கு சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் தரையை நோக்கி பயணித்த அவர், சுமார் 42 செக்கன்களில் 7000 அடி தூரத்தைக் கடந்திருந்தார்.

அதன் பின்னர் பாதுகாப்பாக தரையிறங்குவதற்காக சுமார் 3000 அடி உயரத்தில் அவர் தன் பாரசூட்டை விரித்துக் கொண்டிருந்தார்.

இலங்கை ராணுவ வரலாற்றில் இதுபோன்றதொரு சாதனை நிகழ்த்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.