Header Ads



கொலையாளிகளை தண்டிக்காத நாடுகளின் தரவரிசை - இலங்கைக்கு 6 ஆவது இடம்

ஊடகவியலாளர்களை கொலை செய்து, காணாமல் போக செய்த கொலையாளிகளை கண்டுப்பிடித்து தண்டனை வழங்காத நாடுகள் வரிசையில் இலங்கை 6வது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இலங்கை 5 வது இடத்தில் இருந்தது. ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் மாநாட்டில் வருடாந்தம் வெளியிடப்படும் குளோபல் அம்புனிட்டி இன்டெக்ஸ் அறிக்கையில் இந்த தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சோமாலியா, ஈராக், சிரியா, பிலிப்பைன்ஸ், தென் சூடான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு முதல் 5 இடங்களில் உள்ளன.

இலங்கை 5 ஆம் இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு வந்திருப்பது சிறந்த விடயம் எனவும் அண்மையில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம் கடந்த 30 வருடங்களில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடி அறிய நடவடிக்கை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்நேலியகொட ஆகியோர் தொடர்பில் நடத்தப்படும் விசாரணை குறித்தும் அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.