60 நிமிடங்கள் இருக்கும்போது மைத்திரிக்கு Call எடுத்து, ஆச்சரியம் ஏற்படுத்திய மகிந்த..!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் செல்ல முன்னர், அவருக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி நியூயோர்க் புறப்படுவதற்கு சுமார் ஒரு மணிநேரம் முன்னதாக, அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் இருந்து கேட்ட மகிந்தவின் குரல் ஜனாதிபதிக்கு ஆச்சரியத்தை அளித்தது.
நாட்டின் சார்பாக, பிரமாண்டமான பணியை முன்னெடுத்துச் செல்லும், இலங்கை ஜனாதிபதிக்கு, மகிந்த ராஜபக்ச இதன் போது வாழ்த்துக் கூறினார். அதன் பின்னர், அவர், எமிரேட்ஸ் விமானம் மூலம் நியூயோர்க் புறப்பட்டுச் சென்றார்

Post a Comment