Header Ads



உணவு ஊட்டிய தாய் மரணம், உணவு தொண்டையில் சிக்கி மகனும் மரணம், 2 நாட்கள் பசியால் கதறிய மற்றைய மகன்

அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவந்தார் எரிக்கா தோமசியான். மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்த எரிக்கா (40) தனது ஒரு வயது மகன் மைக்கலுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தபோது திடீரென இயற்கையாக மரணமடைந்தார்.

ஊட்டிக்கொண்டிருந்த உணவு தொண்டையில் சிக்கியதால் மைக்கலும், எரிக்காவுக்குப் பின்னர் உயிரிழந்தார். குழந்தைகளுடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த எரிக்காவின், மூத்த மகனான நேதன் (2), அவர்கள் இறந்த பின்னும், தனியே அந்த வீட்டில் அழுது கொண்டிருந்தான்.

இரண்டு நாட்களுக்கு உணவைத் தேடி கதறி அழுத நேதனின் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு இதுபற்றி தகவல் அளித்தனர். இதையடுத்து, அந்த வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போலீசார், இரண்டு நாட்களாக உணவின்றி வாடிப்போன நேதனைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம், இப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments

Powered by Blogger.