Header Ads



காராத்தே வீரரை வெட்டிக்கொன்ற 20 பேர் கொண்ட குழு, விசாரணையை மேற்கொள்ள 5 பொலிஸ் குழுக்கள்

காராத்தே வீர்ர் வசந்த சொய்சா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு 05 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம் முதித்தா மாவத்தையிலுள்ள இரவுநேர களியாட்ட விடுதியில் வைத்து அடையாளம் தெரியாத சிலரால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகத்தை மூடியவாறு இரவுநேர களியாட்ட விடுதிக்கு சென்ற சுமார் 20 பேரால் நேற்றிரவு 11.45 அளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலில் காயடைந்த இரவுநேர களியாட்ட விடுதியின் மூன்று பணியாளர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த கராத்தே வீரர் வசந்த சொய்சாவின் சடலம் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

8 comments:

  1. என்னா இது புதுசா இருக்கு .கிளாப் க்கு போறவர்கள் எல்லாத்தையும் துறந்து கொண்டுதானே போவார்கள் .அனால் இதில் முகத்தை மூடிக்கொண்டு போய் உள்ளார்கள் .அதுவும் 20 பேரு.

    இந்த நிகழ்வை BBS போன்றோருக்கு இனிப்பு கிடைதாட் போல் இஸ்லாத்தோடும்/முஸ்லிம் பெண்களோடும் ஒப்பிட்டு பேசாமல் இருந்தால் சாரி தான்.

    எத்தனையோ கொலை ,கற்பளிப்பு,ஊழல் வழக்குகள் எல்லாம் இனமும் நிலுவையில் இருக்க, இத சரி அவசரமா புடிச்சி முடிங்கோ ....

    ReplyDelete
  2. Mini Minhaji, நீங்களே பொல்லு எடுத்துக் கொடுத்து இருகின்றீர்கள்.

    "நைட் கிளப் அனாச்சாரம், அது ஹராம், அகவே நைட் கிளப்களை தடை செய்து இருந்தால் இந்த பிரச்சினை வந்து இருக்குமா?" என்று கொமன்ட் பண்ணுவீர்கள் என்று பார்த்தால், நீங்களே பொல்லு எடுத்துக் கொடுக்கின்றீர்கள்.

    உள்ளே வந்து தாக்கிய 20 பேரும் இஸ்லாமிய பெண்கள் போன்று முகத்தை மூடும் ஆடை அணிந்து வந்து இருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். ஆனாலும் முகத்தை மூடி அடையாளத்தை மறைப்பது என்பது பொதுவாகவே பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்பதை மறுக்கக் கூடாது.

    ReplyDelete
  3. அய்யா நிலவனே .
    இது போன்ற உங்களின் விஷமத்தனமான " பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் " வார்த்தைகளுக்கு பதில்கள் கொடுப்பட்டும் ஏற்றுக்கொள்ள மறுத்து பிடிவாதம் பிடிக்கிற உங்களுக்கு அதிகமா எனது நேரத்தை செலவு செய்ய விரும்ம வில்லை.

    முற்றும்

    ReplyDelete
  4. Minhaji, முஸ்லிம் பெண்களின் முகமூடி என்று குறிப்பாக சொல்லவில்லை, எல்லா வகையான உருமறைப்புகள், முகமூடிகள் அனைத்துமே பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தான்.

    நீங்கள் தான் பதில் தர முடியாமல் திண்டாடிணீர்கள். முகமூடுவது இஸ்லாத்தில் இல்லை என்று சாதித்தார்கள் சிலர், பின்னர் தவறு என்று மன்னிப்புக் கேட்டுக் காணாமல் போனார்கள்.

    முகம் மூட வேண்டுமா இல்லையா என்று உங்களுக்கே தெளிவில்லை, பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு விடயத்தை ஏன் பிடிவாதம் பிடிக்கின்றீர்கள்?

    சுயமாக சிந்தித்தாலே, முகத்தை மூடுவது ஆபத்தானது என்பதை புரிந்து கொள்ளலாம். கடவுள் பெண்களின் முகத்தை மூடச் சொல்லி, ஆணாதிக்க வாதம் செய்து இருப்பாரா? சிந்தியுங்கள்.

    ReplyDelete
  5. அவர்கள் எவ்வாறு முகழூடி அணிந்திருந்hர்கள் என்று சரியாக அறிந்துவிட்டு கொமன்ட் பண்ணவூம் அவர்களின் முகமூடிக்கும் இங்கு வழங்களப்பட்டுள்ள கொமண்ட்களுக்குத் ஏதும் தொடர்பு உண்டா என்று பார்து பிரசுரிக்கவூம் அவர்கள்; பொகர போக் (பசளை ளேக்) மேலால் பேர்த்திதி கைவரர் மற்றும் சத்திரசிகிச்சைக்கு வைத்தியர்கள் கட்டுவது போன்ற கறுபடபு சீலையை முகத்தில் கட்டியிருந்நதார்கள் அப்ப முஸ்லிம் பொண்கள் பசளை பெண்கள் பசளை பெக்கா கட்டிக்கொண்டு திரிகின்றார்கள்

    ReplyDelete
  6. Jiffry,

    நேற்றே சொல்லி விட்டேன், உள்ளே வந்து தாக்கிய 20 பேரும் இஸ்லாமிய பெண்கள் போன்று முகத்தை மூடும் ஆடை அணிந்து வந்து இருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம் என்று.

    இங்கே கருத்து, முகத்தை மூடி, உருமறைப்பு செய்வது ஆபத்தானது என்பதுதான்.

    முகத்தை மூடத் தேவையில்லை என்று சொல்வதும், பின்னர் மூட வேண்டும் என்று பல்டி அடிப்பதும்.... ஹி ஹீ ஹீ

    ReplyDelete
  7. யாரும் நான் குறிபிபடாத விடயங்களைக் கூற வேண்டிதில்லை நான் யாரையூம் யெபர் சொல்லிக் கூறவூம் இல்லை

    ReplyDelete
  8. Jiffry, உங்களுக்கும், அனைத்து மனிதர்களுக்கும் பொதுவாக சொல்கின்றேன், முகத்தை மூடிக்கொண்டு பொது இடங்களில் நடமாடுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.

    முகத்தை மூடுவது பசளை லேக் ஆக இருந்தாலும், ஹெல்மட் ஆக இருந்தாலும், சாக்குப்பை ஆக இருந்தாலும், ஹோலோவீன் முகமூடியாக இருந்தாலும், அனைத்தும் செய்வது ஒன்றுதான்.

    நான் உங்கள் பெயரைக் குறிப்பிட்டுத்தான் சொன்னேன்.

    ReplyDelete

Powered by Blogger.