191 புள்ளிகள் பெற்று, புத்தளம் மாவட்டத்தில் முதலிடம்
-Mohamed Muhs-ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் மணல்குன்று அல்அஷ்ரக் முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த எம்.என்.எம்.அஸ்ஹர் 191 புள்ளிகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் முதலாமிடத்தை அடைந்துள்ளார். ما شاء الله/ الحمد لله
இப்பாடசாலையின் அதிபர் மற்றும் இவருக்கு கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். بارك الله فيكم
விஷேடமாக இவரது தகப்பன் மர்ஹூம் எம்.நிலாம்தீன், தாயார் சவுதா உம்மா மற்றும் சகோதரி எப்.புஷ்ரா
ஆசிரியை-சாஹிரா தேசிய கல்லூரி, மைத்துனர் எம்.சஜூ ஆசிரியர்- சாஹிரா தேசிய கல்லூரி, சகோதரர்களான எம்.அஸாம்-பொறியியலாளர், எம்.அம்ஜத்- நில அளவையாளர், எம். அர்சாத்- உயர் கல்வித் துறை மாணவர் ஆகியோர் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். بارك الله فيكم
குறிப்பாக அஸ்ஹரின் இந்த அரிய சாதனையுடன் மர்ஹூம் எம்.நிலாம்தீன், சவுதா உம்மா ஆகியோரின் பிள்ளைகளான ஐவரும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கீர்த்தியையும் பெறுகின்றனர்.
الحمد لله
முன்னதாக இவரின் சகோதரர் அர்சாத் இப்பரீட்சையில் தனது காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றவர் என்பதும் இங்கு சிலாகித்துக் கூறத்தக்கதாகும்.
Masha allah
ReplyDeleteMasha allah
ReplyDelete