Header Ads



ஜனாதிபதியின் இல்லத்தை, புனரமைக்க 18 கோடி ரூபா தேவை - பாராளுமன்றில் தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய இல்லத்தை புனரமைப்பதற்கு 18 கோடி ரூபா தேவைப்படுவதாகக் கூறி நாடாளுமன்றில் குறைநிரப்புப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் புதிய இல்லத்தை புனரமைத்தல், கட்டிட நிர்மானம் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு வாகனக் கொள்வனவு ஆகியனவற்றுக்காக மொத்தமாக 25 கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்ய குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (06) நாடாளுமன்றில் இந்த குறைநிரப்புப் பிரேரணை நமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.

கொழும்பு பெஜட் வீதியின் இலக்கம் சீ 61 மற்றம் சீ 62 ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தின் சுற்றுச் சுழலை நவீனமயப்படுத்தல், புனரமைத்தல் ஆகியனவற்றுக்கு ஒன்பது கோடி ரூபாவும், உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள பகுதிகளில் கட்டடங்களை அமைப்பதற்கு எட்டு கோடி நாற்பது லட்ச ரூபாவும் தேவைப்படுவதாகத் தெரிவித்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது வாசஸ்தலத்தை தேவையற்ற வகையில் ஆடம்பரமாக்கியதாகவும், விரயமாக செலவிட்டுள்ளதாகவும் இந்த அரசாங்கம் குற்றம் சுமத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. this is reasonable and not extravagance. he is a president needs protocol and some services and we cant crticise that.

    ReplyDelete

Powered by Blogger.