திருமணமான 10 நாளில் 'வாட்ஸ் அப்'பில் தலாக் அனுப்பிய கணவர், அதிர்ச்சியில் மனைவி!
கேரள மாநிலம், ஆலப்புழையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவருக்கு, துபாயில் உள்ள அவரது கணவர் "வாட்ஸ் அப்'பில் 3 முறை தலாக் என செய்தி அனுப்பியுள்ளார். திருமணமான 10 நாளில் நடைபெற்றுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் அந்த இளம்பெண்ணின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
ஆலப்புழை மாவட்டம் சேர்தலா பகுதியைச் சேர்ந்தவரும், பல் மருத்துவம் படித்து வருபவருமான இளம்பெண் ஒருவர், கேரள மகளிர் ஆணையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், ''திருமணமான 10 நாட்களுக்குள்ளாக எனது கணவர் துபாய்க்கு புறப்பட்டார். அங்கு சென்று சேர்ந்த தகவலைக்கூட என்னிடம் தெரிவிக்கவில்லை.
நான் பலமுறை அவரை தொடர்பு கொண்டபோதும், குறுஞ்செய்தி அனுப்பியபோதும் அவரிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை. இறுதியாக, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பதில்தான் வந்து சேர்ந்தது. ''எதற்காக என்னை அழைக்கிறாய்? நான் உன்னை விரும்பவில்லை. எனக்காக காத்திருக்காதே. நமக்கு ஆப்பிள் பிடிக்குமென்றால் அதையேதான் நாள்தோறும் சாப்பிடுகிறோமா? மற்ற பழங்களையும் விரும்பிச் சாப்பிடுகிறோம் அல்லவா. தலாக், தலாக், தலாக்" என்ற பதில்தான் எனது கணவரிடம் இருந்து வந்தது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இளம்பெண்ணின் திருமணத்தின்போது பத்து லட்சம் ரூபாய் பணமும், 80 சவரன் நகையும் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எந்தவித காரணமும் இன்றி திடீரென அவரது கணவர் தலாக் அனுப்பியுள்ளார். திருமணமான 10 நாளில் நடைபெற்றுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் அந்த இளம்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், அவரது வாழ்க்கைகும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

All of them are paying very high rate DOURY and this is normal in Kerela....The ladies, should understand and avoid this first....
ReplyDeleteMy personal remarks: I have seen lots of malaylies (around 95% as I have seen) all of the gents do merry in kerala very young & beautiful females plus they are getting hugg doury...why this happening..? according to one of friend of kerala he said...anyone live in abroad then the female side thinking they are the Supper Men and they do marry in whatever cost...
So, the females side must think this then only they can avoid such this accident in the future....
ALLAH MAY HELP THEM...!!
Will he return the DOURY that if had taken ? Was it written in the wedding contract.
ReplyDeleteThis is what happen when Muslim follow the culture of other people and forget the way of Muhammed (sal) and his companions lifestyle.
Whoever comes for money to marry please do not give your daughter, sister and sisters do not agree to any marriage proposal if you think they comes for money. They never love you.
ReplyDeletei agree with R Junaid....
ReplyDeleteone my experience in my life, my sisters is a teacher when cames to marriage matter she strictly said dont issue any dowry for me if anyone ask i complete refuse that marriage .hence ,as a sister we ready to give dowry.but she won ,now allhamdulha she spending very good healthy life.i think that happened because of her in Islam.fallow the islam it will