Header Ads



பாரதிய ஜனதா அலுவலகம் முன், மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் - 100 பேர் கைது (படங்கள்)


உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக் கறி சாப்பிட்டதற்காக இஸ்லாமியர் அடித்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடைபெற்றது. இப்போரட்டத்தை இளைய தலைமுறை கட்சி ஒருங்கிணைத்தது.

போராட்டத்தின் போது மாட்டு கறியையும், பிரியாணியையும் போராட்டக்காரர்கள் சாப்பிட்டனர். இப்போரட்டத்தில் தமிழர் விடியல் கட்சி, த.பெ.திக, மே 17 இயக்கம், தமிழ்நாடு மாணவர் இயக்கம், கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளைய தலைமுறை கட்சியின் முதன்மை செயலாளர் இனியன் ஜான் கூறியதாவது,

உலகிலேயே மாட்டுக்கறி சாப்பிடதற்காக ஒருவர் அடித்து கொல்லப்பட்ட கொடுமை இந்தியாவை தவிர வேறு எங்கும் நடைபெற்றிருக்காது. இது எங்கள் உரிமை, எங்கள் உணவு. நாங்கள் சாப்பிடுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த படுகொலைக்கு காரணமான ஆர்.எஸ்.எஸ் இயக்ககத்தை தடை செய்ய வேண்டும் என்றார். மேலும், தாங்கள் சாப்பிடுவதற்காக கொண்டு கொண்டு வந்த மாட்டுக்கறியை போலீசார் திருடிச் சென்று விட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்...!!!!



21 comments:

  1. தரமான போராட்ட்டம் நரமோடிக்கு ரோசம் வருமா.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சபாஷ், சரியான நெத்தியடி!

    இப்படித்தான் இந்திய ஆட்சியாளரின் முகத்தில் கரிபூச வேண்டும்! இந்தப் போராட்டத்தில் முஸ்லீம்களுக்கு ஆதரவாக சகல இனத்தவர்களும் இறங்கியிருக்கின்றார்கள். நம்மவர்களுக்கும் சந்தோஷம். மேலிருக்கும் பின்னூட்டங்களைப் பாருங்கள்!

    அதெல்லாம் சரி, மாட்டுக்கறி சாப்பிடுபவர்களின் உரிமைக்காக இந்தியாவில் போராட முடிகின்றது. மாட்டுக்கறியை வாயில் வைத்துக் கடித்துப் போராடவும் முடிகின்றது.

    ஆனால், இதேபோல இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களோ யூதர்களோ தமது உணவான பன்றிக்கறிக்காக போராட முடியுமா..? தவறியும் போராடப் புறப்பட்டால் உயிரோடு திரும்பத்தான் முடியுமா..?

    ReplyDelete
    Replies
    1. சரியான தருனத்தில் பொருத்தமான கேள்வி இதற்கு பதில் கிடைக்குமா

      Delete
  4. மாட்டுக்கறிக்கும் பன்றிக்கறிக்கும் நிறைய வேறுபாடுண்டு.
    மாட்டுக்கறி உடலுக்கு ஆரோக்கியமானது. பன்றிக்கறி தீங்கானது.
    விஞ்ஞானம் 20ம்நூற்றாண்டில கண்டறிந்த உன்மையை திருக்குர்ஆன் 6ம் நூற்றாண்டிலேயே தெளிவு படுத்தியிருக்கிது என்பதை அறியாத ஜென்மங்களின் அதி மேதாவித்தனத்தை என்னென்பது?
    மனித உரிமை என்ற அடிப்படையில் கூட, பன்றிக்கறி இஸ்லாமிய நாடுகளில் சட்டரீதியாக தடை செய்யப்பட்டது. எனவே அது சட்டப்படி குற்றம்.
    இந்த அடிப்படை உன்மைகளைக்கூட அறியாது பின்னூட்டமெழுதி தனது முட்டாள்தனத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் ஜெஸ்லியா.
    அதைவிட குர்ஆனை மறுத்துள்ள இவர் எப்படி தன்னை முஸ்லிம் என்று தோற்ரப்படுத்துகிறாரென்பது புரியவில்லை.

    ".உலகிலுள்ள அனைத்து மதத்தின் கோட்பாடுகளையும் ஐயந்திரிபற கற்றறிந்து அவற்றிலே சிறப்பான மதத்தை தெரிவு செய்து பின்பற்றுவது என்பது எவ்வளவு தூரம் சாத்தியம்? 2.ஒரு குறித்த மதம் மட்டுமேதான் உண்மையானதாக இருக்கும் என்பதுவும் அந்த மதத்துக்குரிய இறைவன் ஏனைய மதங்களைப் பின்பற்றியோரை அவர்களது பிறப்பு மற்றும் சூழ்நிலைபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தண்டித்து நரகிலிடுவான் என்பதும் எவ்வளவு தூரம் நியாயமானது?"

    என்ற இவரது கோட்பாடு வெளிப்படையாகவே இஸ்லாத்துக்கு முரணானது.

    இவரைப் பற்றி இவரது பின்னனி பற்றி முஸ்லிம்கள் அதானிப்பது மிக அவசியமானது.

    ReplyDelete
  5. This is a celebration of Indian democracy. It has nothing to do with Muslim rights rather a protest to preserve the rights granted in its constitution to Indian citizens. If the dieased was a pork eater same protest would have undertaken? I did not see any response for Nazliya Nazly's comments?

    ReplyDelete
  6. என்ன jesliya வம்ப வில கொடுத்து வாங்குரடா முடிவேதுடீன்களா??? மாட்டிரசு சாப்புட்டதுக்கு ஒரு முஸ்லிமை அடித்தே கொண்டிருக்கான்கள் இந்து நாட்டில் அத எப்படியாவது மூடி மறைக்க தான் இந்த ஆர்பாற்றமே ..எந்த முஸ்லிம் நாட்டுலயவது அந்நியர்களை கொடுமை படுத்திய சம்பவம் கடந்த பல தசப்தங்கள்ள யாவது கேள்விப்பட்டதுண்டா??? இல்லையே... ஆனால எல்லா அந்நிய நாட்டுலயும் முஸ்லிம் களை கொடுமை படுத்தி சித்திரவதை செஞ்சு அடிச்சு கொலையே செயற செய்தி டெய்லி நியூஸ் ஆக இருக்கு . இதற்கு என்ன சொல்ல போறீங்க???

    ReplyDelete
    Replies
    1. பாக்கிஸ்தானில் நடந்த கொடுமை உங்களுக்கு எதுவும் தெரியாதோ எனக்கு நடந்த ஓர் நிகழ்வு சவுதியில் நான் இருக்கும் பொழுது அங்குள்ள முஸ்லீம்கள் கேட்கும் முதல் கேள்வி நீ என்ன மதம் முஸ்லீம் மதம் இல்லை என்றால் முகத்தை சுழிப்பார்கள் முகம் குடுத்து கதைக்கமாட்டார்கள் இலங்கையில் இருந்த நினைப்பில் நெற்றியில் வீபூதி பூசி இருந்தேன் அதை அழிக்கசொல்லி முஸ்லீம் ஒருவன் கட்டாயப்படுத்தியது என்னால் மறக்கமுடியாது

      Delete
    2. Bro selvan anda oru anupavathai vaithu ellarum appadithan endru ninaikkathirhal.
      Muham sulippathu veru adiththu kolluvathu veru.
      Many Arabs normally see Asians as 3rd class citizens. Whether the Asians are Muslims or not.

      Delete
  7. @jessly,
    மாற்று மதங்களை பற்றி அடிப்படை அறிவு கூட உங்களுக்கு இல்லை என்பது மிக தெளிவு. பன்றி இறைச்சியை சாப்பிட்டுவது,Christians & jews இவர்களின் மதத்தில் அனுமதிக்காத போது எப்படி இஸ்லாமிநாடுகளில் போராட முடியும் ?.முஸ்லிம்களின் மீதுள்ள கால்புணர்ச்சியில் அடுத்தமததில்(Christians & jews )இல்லாததை இருப்பதாக சொல்லி அவர்களை கேவலப்படுத்தாதீர்கள்.

    ReplyDelete
  8. Jesslya Jessly,
    தங்கள் நேர்மைக்கு,மதநல்லிணக்கத்திற்கு தலைவணங்குகிறோம்.

    ReplyDelete
  9. Hey loosy jessly, which religion has allowed to eat pig?

    ReplyDelete
  10. @செல்வன்
    மதங்களை பற்றி தெரியாத ,மற்ற மதத்தில் இல்லாததை சொல்லுவது தான், நேர்மை ??,மத நல்லிணக்கம் ???? இலங்கையில் ஞானசார ,மியன்மாரில் ஒரு விராது தேரர்களும் மதங்களில் இல்லாத இது போன்று கருத்துக்களை தான் சொல்லுகிறார்கள்.

    ReplyDelete
  11. Jesslya Jelsly nalla kelvi thaan. But Islam is different. Christians are not allowed to eat Pork according to their scriptures. Just because they follow/support us we can't follow in their path.
    I suggest you to read why Surah kafiroon has been revelad.
    It will give you a clear answer.

    ReplyDelete
  12. பன்றிக்கறி என்பது ஓர் உதாரணத்துக்கு கூறப்பட்ட விடயம்தான்.

    நாம் நமது உரிமைக்காக போராடும்போது மாற்றுமதத்தவர்கள் ஆதரவளிப்பதை எவ்வளவு தூரம் வரவேற்கின்றோமோ அத்தனைக்கத்தனை அவர்கள் தமது உரிமைக்காக (நமது முஸ்லீம் நாடுகளில்) போராடும்போது அதற்காக ஆதரவளிக்க வேண்டுமல்லவா..?

    அவர்கள் பன்றிக்கறிக்காகப் போராடும்போது (ஒருபேச்சுக்குத்தான்) நாமும் அவர்களோடு போய் நின்று அதை வாங்கி உண்ணச்சொல்லவில்லை. அது அவசியமுமில்லை. ஆனால் அவர்களின் போராட்டத்திலுள்ள நியாயத்திற்கு ஆதரவளிக்கலாம் அல்லவா?

    கள்ளமௌனம் காப்பதைத்தவிர, அதை நாம் ஒருபோதும் செய்வதில்லையே..?

    ReplyDelete
  13. Sis JJ- I think you didn't understand Islam very well. When Islam say "haram" that means it's not good for human kind. That's why allah prohibits.as Muslims we must obey it.
    When it comes to non Muslims we cannot say oh it's not haram for them so it's ok we can give or support them if they wanna eat.
    No it doesn't work that way. What is prohibited for us is prohibited to others as well.
    Theemaiyai thaduppathe Islam. Athu namakko allathu aduthavarukko endralum sariye.

    ReplyDelete
  14. சரி, நண்பரே வொய்ஸ் சிறீலங்கா, பன்றிக்கறியை விட்டு விடுவோம்.

    மேற்கத்திய நாடுகளுக்கு நாம் தொழில், படிப்பு நிமித்தம் சென்று வாழந்தால் அங்கு நம்முடைய தொழுகையை நிறைவேற்ற குறைந்தபட்சமாக ஒரு தொழுகை அறையையோ கூடியதாக பள்ளிவாசலைக்கூட நிர்மாணிக்கின்றோம். சிலவேளையில் அதற்கு யாராவது சிறு இடையூறு செய்தால் கொதித்துப்போய் உரிமைக்குரல் கொடுத்து போராட்டத்தில் குதிக்கின்றோம்.

    ஆனால் அதே உரிமையை நம்முடைய இஸ்லாமிய நாடுகளிலே தொழிலுக்காகச் சென்றிருப்பவர்களுக்கு நாம் மறுக்கின்றோம்.

    அவர்கள் தங்களது அறைகளிலே கூட தமது கடவுளர்களின் உருவச்சிலையையோ அல்லது படங்களையோ வைத்திருக்கக்கூடாது என்று வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

    இது நியாயமா..?

    உரிமைப் போராட்டங்களெல்லாம் பாதிக்கப்படும் தரப்பாக நாம் இருக்கும்போது மட்டும்தானா..?

    இதற்கு சப்பைக்கட்டுக் கட்டாமல் நியாயமான பதில் கூறமுடியுமா.. நண்பரே வொய்ஸ் சிறீலங்கா..?

    ReplyDelete
  15. voicesrilanka says: what is prohibited for us is prohibited to others as well.
    இதை தானே பி.ஜே.பி பாசியவாதிகளும், இலங்கை இனவெறியர்களும் சொல்வது. இரண்டும் சமன் செய்யபட்டுகிறதா?

    ReplyDelete
  16. Unkalin islamiya arivai enni kavalaipadihiren. Only in Saudi they have such rules not any other Islamic country.
    2. Check how many " Coptic/Christians " lives in Arab countries.
    If you don't know who Coptic/Christians are,please find out about them.
    Nadunilaivathi endru ninaithu muttal thanamaha islaththai vimarsikkathirhal.

    ReplyDelete
  17. Selvan! Yes the point in here Jesslya Jessly said we also have to support them in their course. It doesn't mean we can prevent them or stop them from eating/doing haram things.
    What my point we cannot be a helper/messenger in doing wrong things

    ReplyDelete

Powered by Blogger.