குவைட்டுக்கான இலங்கை தூதுவராலய, பொறுப்பதிகாரியுடன் SLTJ சந்திப்பு
குவைட் நாட்டுக்கான இலங்கை தூதுவராலய அதிகாரியுடன் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இலங்கையில் இருந்து பணி செய்வதற்காக குவைட்டுக்கு வருகை தரும் பணியாளர்கள், குறிப்பாக வீட்டு வேலைக்கு வரும் பணிப் பெண்கள் கடும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கப் படுகின்றமையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மனு ஒன்றும் குறித்த சந்திப்பில் தூதுவராலய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையில் இருந்து குவைட் நாட்டுக்கு பணிப் பெண்களாக வருகை தந்து பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவு கொடுத்து, தாயகத்திற்கு திரும்ப அனுப்பி வைப்பதற்கு சரியான நடவடிக்கைகளை தூதரகம் சார்பில் எடுக்கக் கோரியும், பணிப் பெண்களை வியாபார நோக்கத்துடன் அழைத்து வரும் முகவர் நிலையங்கள், குறித்த பெண்கள் பாதிக்கப்படும் போது அவர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமாக இருந்தும் அதனை கண்டும் காணாமல் இருப்பதை கண்டித்தும், முகவர் நிலையங்கள் மீது தூதுரக அதிகாரிகள் தனி கண்காணிப்பு செலுத்த வேண்டும் என்றும், இந்தியா, பங்களாதேஷ், நேபாள் போன்ற ஆசிய நாடுகள் தங்கள் நாட்டுப் பெண்களை குவைட்டிற்கு பணிப் பெண்களாக அனுப்புவதை நிறுத்தியதைப் போல் குறித்த பிரச்சினையை முற்றாக தடுக்கும் வகையில் இலங்கையிலிருந்து வீட்டு பணிப் பெண் வேலைக்கு பெண்கள் அனுப்பப் படுவதை தடுக்க தூதரகம் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டது.
அத்துடன், பணிப் பெண்கள் படும் கஷ்டங்கள் தொடர்பில் தவ்ஹீத் ஜமாத்திற்கு பலராலும் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, பணிப் பெண்களாக இலங்கை பெண்கள் வேலைக்கு வருவதை தடுத்து நிறுத்தும் விதமான பாரிய பிரச்சார நடவடிக்கைகளை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக முன்னெடுப்பது என்றும் குறித்த சந்திப்பில் உறுதியெடுக்கப் பட்டது.
இந்த சந்திப்பின் போது குவைத் நாட்டுக்கு பிரச்சாரத்திற்காக சென்றுள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குவைட் மண்டல தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

There is a ministry and a bureau to handle the recruitment and housemaid complaints. This is non of sltj business i think.
ReplyDeleteThere is a ministry and abureau to handle this issue, So Brother "Mohamed asfar" has nothing advice in this regard.
ReplyDeleteCan I say above ? If you agree... Then I too agree with your statement.