Header Ads



ரணிலின் பெயரில், காப்பாற்றப்படும் குற்றவாளிகள் - சிங்கள இணையம் பரபரப்பு தகவல்


மக்களுக்கு சொந்தமான 60 கோடி ரூபா பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்கவை தண்டனையில் இருந்து காப்பற்ற ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த இரு முக்கியஸ்தர்கள் முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லலித் வீரதுங்கவை தண்டனையில் இருந்து தப்புவிப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தனவை இணங்க வைக்கும் தலையீடுகளை இவர்கள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்குமார் சங்கத்தின் தலைவர் தினியாவல பாலித தேரர் ஆகியோரே இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.

லலித் வீரதுங்க கைது செய்யப்படுவதை தடுப்பது தொடர்பில் இவர்கள் நீதிபதி சரோஜினி வீரவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தாம் பிரதமர் சார்பில் இந்த தலையீட்டை மேற்கொள்வதாகவும் அவர்கள் இதன் போது கூறியுள்ளனர்.

அதேவேளை 100 நாள் வேலைத்திட்ட காலத்தின் போதும் வஜிர அபேவர்தன இவ்வாறு மோசடியாளர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் சார்பில் தான் பேசுவதாக கூறி, அபேவர்தன அழுத்தம் கொடுத்துள்ளதாக குறித்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. The coalition govt; will protect all the wrong doers of the previous regime! So far NATO!

    ReplyDelete

Powered by Blogger.