கட்டாரில் இலங்கையர்களின், பெருநாள் ஒன்றுகூடல் (படங்கள் இணைப்பு)
கட்டார் வாழ் இலங்கையர்களின் ஹஜ் பெருநாள் ஒன்று கூடலும் விளையாட்டு நிகழ்சிகளும் கட்டார் விளையாட்டு மைதானத்தில் (எஸ்.எல்.டி.சி) கட்டார் அமைப்பினால் நடைபெற்றது.
சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர்கள், பெண்கள் என அனைவருக்கும் இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கிறிக்கெட், ஓட்டப் போட்டிகள், பலூன் உடைத்தல், தேசிக்காய் கரண்டி ஓட்டம், சாக்கோட்டம், எலி ஓட்டம், யானைக்கு கண்வைத்தல், குறி பார்த்து சுடுதல், ஊசியில் நூல் கோர்த்தல், கையிறு இழுத்தல், தலையணை மாற்றுதல், பெண்களுக்கான விசேட நிகழ்ச்pசகள் என பல வகையான நிகழ்சிகள் இடம்பெற்றது. மேலும் போட்டி நிகழ்சிசகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும், கிண்ணங்களும் வழங்கப்பட்டது.





Post a Comment