Header Ads



"காணவில்லை"


ஜெனீவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மற்றும் அக்கிரமங்கள், இனச்சுத்திகரிப்பு குறித்து அங்கு எதுவும் பேசப்படவில்லை.

இலங்கை முஸ்லிம் சமூகத்திடமிருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒரு அறிக்கை மூலமும், அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கி சிறு பேட்டியொன்றின் மூலமும் ஜெனீவா பற்றிய தமது  கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் அமெ­ரிக்கா கொண்­டு­வந்­துள்ள தீர்­மான வரை­வுக்கு இலங்கை அர­சாங்கம், இணை அனு­ச­ரணை வழங்­கு­வ­தாக தெரி­வித்­துள்ள நிலையில் அந்த வரைவில் இனநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் அல்லது போக்குற்றம் என்று வரும் போது வடக்கிலும், கிழக்கிலும் புலிப் பயங்கரவாதிகளும், தமிழ் ஆயுத இயக்கங்களும் மேற்கொண்ட முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் தவிர்க்கமுடியாதவை.

தற்போதும் கூட முஸ்லிம்களின் பல பிரதேசங்கள் இராணுவப் பாதுகாப்பு மற்றும் தொல் பொருள் ஆராய்ச்சி என்ற நாமங்களில் கபளீகரம் செய்யபட்டுள்ளன.

எனினும் துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்தின் சார்பில் அமெ­ரிக்கா கொண்­டு­வந்­துள்ள தீர்­மான வரைபில் அவை எவையுமே கண்டு கொள்ளப்படவில்லை

ஹக்கீமும், றிசாத்தும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் அவர்களால்தான் ஒரு அளவுக்கு அப்பால் பேசமுடியாது என்றால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எங்கு சென்றது..?

முஸ்லிம் சமூகத்தில் கடந்த கால 2 தேர்தல்களிலும் நல்லாட்சி குறித்து அதிகமாக பேசிய பெருமை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியையும், அதன் தவிசாளர் அப்துர் ரஹ்மானையும் சாரும். நல்லாட்சியின் ஒரு அங்கமே மனித உரிமைகளை பாதுகாப்பதுதான். 

இலங்கை விவகாரம் சர்வதேச கவனத்தை பெற்றிருக்கும் தற்போதைய முக்கியத்துவமிக்க இந்த காலக்கட்டத்தில் இலங்கை முஸ்லிமகளுக்கு மீறப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு, காணி அபகரிப்பு உள்ளிட்டவைகளை இப்போது பேசாமல் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எப்போது பேசப்போகிறது..?

நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு சில ஐரோப்பிய வெளிநாட்டு தூதரங்களுடன் தொடர்புள்ளது. குறைந்தபட்சம் அந்த தூதரகங்களின் உதவி பெற்றாவது அவர்கள் ஜெனீவா சென்று அங்குள்ள மனித உரிமை அமைப்புக்களையோ அல்லது ஜெனீவாவில் அமெரிக்கா தயாரித்த வரைபில் இலங்கை முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் புலிகள், இராணுவம், அரசாங்கம், பௌத்த இனவாத அமைப்புக்களால் இழைக்கப்பட்ட அநீதிகளை வெளிக்கொணர நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

இல்லாவிட்டால் இலங்கையில் உள்ள மனித உரிமைகள் அமைப்புக்கள், சாவதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் கவனத்திற்கு இவற்றை கொண்டு சென்றிருக்கலாம். 

எனினும் தற்போது தற்போதுவரை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஜெனீவா விவகாரங்கள், அதில் முஸ்லிம்கள் கண்டு கொள்ளப்படாமை உள்ளிட்ட விடங்கள் குறித்து ஒரு அறிக்கைதானும் வெளியிடாமல் இருப்பது கவலைக்குரியது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தமமது ஒட்டுமொத்த கவனத்தையும் முஸ்லிம் காங்கிரஸ், தேசியப் பட்டியல் தருமா என்பதில் குவித்தமையும், அல்லது முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் புலிகளும், தமிழ் ஆயுத இயக்கங்களும் இழைத்த அநீதிகளைப் பேசி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெறுப்பை சம்பாதிக்க்கூடாது என்று  கருதுவதாலுமா இவ்விடயங்கள் குறித்து வாய் திறக்கவில்லை என கேட்கத்தோன்றுகிறது..!

3 comments:

  1. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியால் மாத்திரமே இவ்வாறான ஒரு விடயத்தை ஆக்கபூர்வமாக செய்யக் கூடிய அறிவியல் வளமும், தகைமையும் உள்ளது என்பதனாலேயே மேற்படி விடயம் தொடர்பில் அவர்களின் நிலைப்பாடு வெகுவாக வேண்டப்பட்டுள்ளது.

    நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொருத்தமில்லாத இடங்களில் பொருத்தமற்ற விடயங்களை பேசாது. ஜெனீவா தீர்மானத்தின் பேசுபரப்புக்குள் அடங்காத காலப்பகுதியில் நடைபெற்ற விடயங்களை, வெறும் அரசியல் ஆதாயத்திற்காகப் பேசி, விடயம் அறிந்தவர்கள் மத்தியில் நகைப்பிற்கிடமான நிலையை பெற்றுக்கொள்ளும் ஒரு கோமாளிக் கூட்டமைப்பு அல்ல, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி.

    ஜெனீவா தீர்மானத்தின் பேசு பரப்புக்குள் அடங்கும் விடயங்கள் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப் பட்டால், அடுத்த நகர்வுகளை வேறொரு கோணத்தில் இருந்து ஆரம்பிக்கலாம் என்பதை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிந்தே உள்ளது.

    ReplyDelete
  2. இது என்ன குழந்தைப் பிள்ளைத்தனமான கட்டுரை.

    ReplyDelete
  3. இது என்ன குழந்தைப் பிள்ளைத்தனமான கட்டுரை.

    ReplyDelete

Powered by Blogger.