Header Ads



ஜெனீவாவில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முறைப்பாடு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. எதிர்வரும் வாரத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை பாதிக்கும் வகையில் பிரதமர் கடந்த காலங்களில் நாடாளுமன்றில் செயற்பட்டார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை வெளியிட பிரதமர் இடமளிப்பதில்லை.

சில சந்தர்ப்பங்களில் சபாநாயகருக்கும் மறைமுகமாக அழுத்தங்களை பிரயோகிக்கின்றார். இதனால் சபாநாயகரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார். பிரதமரின் நடவடிக்கையினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பிரதமரின் நடவடிக்கைகள் குறித்த காணொளிகளை தேவையென்றால் சர்வதேச நாடாளமன்ற சங்கத்திற்கு சமர்ப்பிக்க முடியும் என வாசுதேவ நாணயக்கார கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் நாடாளுமன்றில் நடந்து கொள்ளும் விததத்திற்கு எதிராக நாடாளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பை வெளியிட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஏதேனும் ஓர் வழியில் எதிர்ப்பை வெளியிட தீர்மானித்துள்ளதாக இந்தக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

1 comment:

  1. First listen to the speech which you made in the previous parliament and make a complaint for that as self complaint.
    Then proceed.
    We thought you have some sense.
    But you also a third class racist.
    Ifb not you have to prove yourself making a complaint against BBS in Sri Lanka Police

    ReplyDelete

Powered by Blogger.