Header Ads



விவசாயக் குடும்பமான மைத்திரி ஜனாதிபதி என்றபோதிலும், விவசாயிகளுக்கு விமோசனமில்லை

விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் நாடாளும் காலத்தில் விவசாயிகள் நடுத்தெருவில் நிற்க நேர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க விமர்சித்துள்ளார்.

ஹொரணை பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய விதுர விக்கிரமநாயக்க,

இலங்கையின் மிகவும் பின்தங்கிய பகுதியிலிருந்து விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மைத்திரிபால இன்று நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார்.

ஆனால் அவருக்கு விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து எந்தவித கவலையும் இல்லை. தாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லை விற்பனை செய்துகொள்வதற்குக் கூட விவசாயிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

அந்த வகையில் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் நாடாளும் காலத்திலேயே விவசாயிகள் நடுத்தெருவில் நிர்க்கதியாக நிற்கவிடப்பட்டுள்ளார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.