அமெரிக்காவுக்கு காட்டிக்கொடுக்கும் செயல் - தினேஸ் குணவர்தன
ஜெனீவா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த யோசனைக்கு இலங்கை உடந்தையாக செயற்படுவது காட்டிக்கொடுக்கும் செயல் என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இலங்கை வரலாற்றில் இவ்வாறான காட்டிக்கொடுப்புகளை இதற்கு முன்னர் தாம் காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, கலந்து கொண்டு உரையாற்றினார்.

Howmany times your gang cheated international under the mahinda ragime? Because of that, now the mythiri government is getting results from the international. This is the fact.ok
ReplyDelete