Header Ads



கம்யூனிசத்தில் ஊறிய விளாடிமிர் புடின், அல்லாஹ்வின் இல்லத்தை திறந்துவைத்தார்


ஜூம்ஆ தொழுகைகளாகட்டும், பெருநாள் தொழுகைகளாகட்டும் மாஸ்கோவில் இஸ்லாமியர்கள் இடப் பற்றாக் குறையினால் ரோடுகளில் தொழும் நிலை ஏற்பட்டது. ரஷ்ய மக்களிடையே இறைவனை தொழுவதில் ஏற்பட்ட ஆர்வமே தற்போதய இடப் பற்றாக் குறைக்கு காரணம். நாத்திகம் மறைந்து ஆத்திகம் இவர்களிடம் துளிர் விடத் துவங்கியுள்ளது. 

1904 ல் கட்டப்பட்ட பள்ளி வாசலானது 2005ல் புனரமைக்கப்பட்டது. 2011ல் முழுவதுமாக இடிக்கப்பட்டது. தற்போது அதே இடத்தில் 170 மில்லியன் செலவில் கிட்டத் தட்ட 10000 பேர் ஒரே நேரத்தில் தொழத்தக்க வகையில் இந்த பள்ளி கட்டப்பட்டுள்ளது. புதன் கிழமை இதன் திறப்பு விழா நடந்தேறியது. திறப்பு விழாவுக்கு ரஷ்ய அதிபர் புடின், துருக்கி பிரதமர் எர்டோகான், பாலஸ்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸ் போன்றோர் கலந்து கொண்டனர். கம்யூனிஷ கொள்கையில் ஊறிய விளாடிமிர் புடின் கைகளாலேயே இறை இல்லத்தை திறக்க வைத்தது பார்ப்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.. 

தகவல் உதவி
நியூயார்க் டைம்ஸ்



1 comment:

Powered by Blogger.