Header Ads



ஜனாதிபதி மைத்திரி, ஒரு அப்பாவியா..?

தாக்குதல் மற்றும் தாக்கப்படுவதனை தாங்கிக்கொண்டு “நல்லாட்சி” உள்ளதென சிலர் நினைப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கட்டுகாஹேன வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

சிலர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் அப்பாவியாக தெரிவதாகவும் அரசாங்கத்தை சிலரது விரல்களால் சுற்றி மூடிக்கொள்ள முடியும் என்று நினைக்கின்றார்கள்.

சில அவர் மீசை இல்லாதவர் எனவும் அவர் கடுமையான பாத்திரம் அல்ல எனவும் கூறுகின்றார்கள்.

எனினும், அவரது வெற்றியின் வழி கடுமையானதாக உள்ளது. அவர் ஒரு இளைய ஜே.ஆர் போல் செயல்படுகின்றார். அவர் அப்பாவி போல் தெரிகின்றார்.

அவர் அனைத்திற்கும் உடன்பட விரும்புகின்றார். எனினும், அவர் உறுதியாக செயல்படுகின்றார். என சுகாதார ராஜித அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது அரிசியையும் மற்றவர்களுக்கு வழங்கிவிட்டு வாழ்ந்த ஒரே ஒரு அரசர் தான் இலங்கையில் வாழ்ந்துள்ளார். ஏனைய அரசர்கள் ஏனையவர்களின் தலையை வெட்டுபவர்களாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.