Header Ads



சம்மாந்துறையில் 30 ஏக்கர், நிலப்பரப்பில் அபிவிருத்தித் திட்டம்


-யு.எல்.எம். றியாஸ்-

நகர அபிவிருத்தி அமைச்சின் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் வேண்டுகோளின் நிமிர்த்தம் இவ் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதெற்கென சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்திற்கு அண்மித்துள்ள வயல் பிரதேசத்தில் உள்ள  30 ஏக்கர் நிலப்பரப்பில் இவ் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளன.

குறிப்பாக சிறுவர்களின் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு பொழுது போக்கு பிரதேசமாக இப்பிரதேசம் மாற்றியமைக்கப்பட உள்ளது.

இது தொடர்பான முதற் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி அமைச்சின் உயர் மட்டக் குழுவினருடனான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நகர அபிவிருத்தி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் என்.சுரேஷ், காணி மீள் நிரப்பல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,பிரதேச
செயலாளர், மற்றும் திணைக்களத்தின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.