Header Ads



'செல்பி மோகத்தில் சிக்கித்தவிக்கும் மக்கள், பிரியும் உயிர்கள்...!

சர்வதேச அளவில் செல்பி எடுக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது என்று ஹப்பிங்டன் போஸ்ட் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

செல்பி மோகத்தில் சிக்கித்தவிக்கும் மக்கள், அதனால் ஏற்படும் விளைவுகளை அறிந்தும் திருந்தியபாடில்லை.

இந்நிலையில், இந்த ஆண்டில், சுறா மீன் தாக்குதலில் சிக்கி 8 பேர் இறந்திருப்பதாகவும், செல்பி எடுக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 12 பேர் இறந்திருப்பதாக ஹப்பிங்டன் போஸ்ட் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹால் படிக்கட்டில் விழுந்து, மின்சாரம் பாய்ந்து, பாலங்கள் மீது நின்று, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு என விதவிதமாக வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.