ஜனாதிபதி மைத்திரி உத்தரவிட்டால், தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்த தயார் - சிறைச்சாலைகள் திணைக்களம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டால் நவம்பர் மாதம் தொடக்கம் தூக்குத்தண்டனையை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார தெரிவித்துள்ளதாவது,
தூக்குத்தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவுக்கு நாங்கள் காத்திருக்கின்றோம். அதற்கு ஏதுவாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள தூக்குமேடை தற்போது தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மேலும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் தற்போதைக்கு சுமார் 15 வரை கிடைக்கபெற்றுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்தும் விண்ணப்பிக்கலாம்.
பொருத்தமான ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவார்.
ஆனால் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியின் உத்தரவு கிடைத்தால் மாத்திரமே அலுகோசு பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Post a Comment