Header Ads



மைத்திரியும், ரணிலும் மறந்துவிட்ட விவகாரம்..!

மைத்திரி-ரணில் தலைமையிலான அரசாங்கம் பாதை மாறிச்சென்று கொண்டிருப்பதாக ராவய பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

குறித்த கட்டுரையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,

தற்போதைய அரசாங்கத்தை பொதுமக்களே முன்னின்று உருவாக்கினார்கள். அதற்கான சிவில் அமைப்புகள் களத்தில் இறங்கிப் போராடின. இதன் காரணமாகவே அரசியல் தலைவர்கள் தேர்தலுக்கு முன்னர் சிவில் அமைப்புகளுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

ஆனால் தற்போது மைத்திரி- ரணில் உள்ளிட்டோர் தங்களது முயற்சி காரணமாகவே இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளனர். ரணிலும், மைத்திரியும் மஹிந்தவை விரட்டியடிப்பதற்குத் தேவையான பலத்தைக் கொடுத்தவர்கள் பொதுமக்கள் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடடார்கள்.

அதன் காரணமாகவே பொதுமக்களால் வெறுக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசாங்கத்தில் கௌரவங்கள் அளிக்கப்படுகின்றன. பொதுமக்களின் சொத்துக்களைச் சூறையாடியவர்கள் அரச ஆதரவுடன் காப்பாற்றப்படுகின்றனர்.

ஒரு அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் சிறிதுகாலம் பொதுமக்கள் விட்டுப் பிடிப்பது வழக்கம். அதன் காரணமாக கடந்த ஜனவரியிலிருந்து இந்த அரசாங்கத்திற்கும் பொதுமக்கள் சலுகைக் காலம் ஒன்றை வழங்கியிருந்தார்கள். ஆனால் இனியும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் பொதுமக்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை அரசியல் தலைவர்கள் கடுமையான பாடங்களின் ஊடாக உணர்ந்து கொள்ள நேரிடும் என்றும் ராவய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

3 comments:

  1. Fantastic article after a long time.

    ReplyDelete
  2. Yes. We also agree with this fact

    ReplyDelete
  3. பொது மக்களாகிய தமிழ் முஸ்லிம் மக்களே இந்த அரசாங்கத்தை நிறுவிட்டார்கள்.பதவிக்கு வந்த அரசாங்கம் மக்களை மறந்து ஏனோ தானோ என்று செயல் படுவது எமக்கு கவலையே அளிக்குறது.

    ReplyDelete

Powered by Blogger.