டாய்லெட் கதவு என, விமானக் கதவை திறக்க முயன்ற பயணி
நெதர்லாந்தைச் சேர்ந்த கேஎல்எம் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் இருந்து நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாமின் சிபோல் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் ஸ்காட்லாந்தில் உள்ள அல்லோயாவைச் சேர்ந்த ஜேம்ஸ் கிரே என்பவர் பயணம் செய்தார்.
இந்த விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது கழிவறைக்குச் செல்வதற்காக எழுந்துள்ளார். அப்போது கழிவறை கதவு என்று நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் விமான ஊழியர்கள் அவரை தடுத்து சீட்டில் உட்கார வைத்துள்ளனர்.
பின்னர் விமானம் சிபோல் விமான நிலையத்தை அடைந்த உடன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவருக்கு 600 யூரோ அபராதமும், கேஎல்எம் விமானத்தில் பயணம் செய்ய ஐந்து வருடம் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜேம்ஸ் கிரே கூறுகையில் ‘‘விமான ஊழியர்கள் நான் விமானக் கதவை திறக்க முயன்றதாக குற்றும் சாட்டியுள்ளனர். ஆனால், கழிவறையின் கதவு என்று தவாறாக நினைத்து விமானக் கதவின் மேல் கை மட்டும்தான் வைத்தேன். திறக்க முயற்சி செய்யவில்லை.
விமான ஊழியர்கள் என்னை சீட்டில் அமர சொன்னார்கள். பின்னர் விமானம் தரையிறங்கியதும் என்னை போலீஸ் கைது செய்தனர். என்னுடைய சிறிய தவறை விளக்க முயற்சித்தேன். அவர்கள் தவறாக புரிந்துகொண்டு என்னை கைது செய்தார்கள். அவர்கள் என்னுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளவி்ல்லை’’ என்று பரிதாபமாக கூறினார்.

தடை செய்யப்பட்ட மதுவை குடித்தால் எந்த கதவும் தெருயாதுதான்.நல்ல வேலை அவன் ஒரு முஸ்லிம் இல்லாமல் போனது தப்பித்தவறி முஸ்லிமாக இருந்திருந்தால் தீவரவாதி என்று கைது செய்து இருப்பார்கள்.ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் வெளியேறும் கதவு,கழிவு அறைகதவு தெரியாமல் நுழைய மாட்டான்.இன்ஷா அல்லாஹ்
ReplyDelete