"புனித மக்காவில், இஹ்ராமுடைய உடையில் தமது உயிர் போக வேண்டுமென விரும்புபவர்கள்..!
-மு.மு.மீ-
மதுவையும் மங்கையையும் நேசிப்பவர்களல்ல மறுமையை நேசித்தவர்கள்...!!
ஹஜ்ஜுக்கு செல்லக்கூடியவர்கள் மேலே ஒரு வெள்ளை நிற ஆடையும், கீழே ஒரு வெள்ளை நிற ஆடையும் அணிந்து செல்வர்.
அந்த ஆடை சமத்துவத்தையும், சமாதானத்தையும் ஒருபுறம் போதித்தாலும் இன்னொருபுறம் மரணத்தையும் போதிக்கும்.
முஸ்லிம்கள் யார் இறந்தாலும் அவர்கள் மீது வெள்ளை நிற ஆடை போர்த்தி அடக்கம் செய்வது வழக்கம்.
ஹஜ்ஜுக்கு செல்லக்கூடிய முஸ்லிம்கள் வெள்ளை நிற ஆடையோடு மரணத்தையும் சுவைப்பதற்கு தயார் என்று தான் மக்காவிற்கு செல்கிறார்கள்.
முஸ்லிம்களை பொறுத்தவரை மரணம் வாழ்வின் முடிவல்ல, மறுமை வாழ்வின் ஆரம்பம்,
உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட ஆதம் நபி முதல் இன்று வரை உலகில் பிறந்தவர்கள் யாரும் உயிரிழக்காமல் இருந்ததில்லை, உலக மக்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.
என்றாவது ஒரு நாள் எங்கிருந்தாலும் நமது உயிரும் போகத்தான் போகிறது,
அந்த உயிர் மக்காவிலே புனித பயணத்தின் போது இஹ்ராமுடைய அடையிலே போவதில் முஸ்லிம்கள் விரும்பக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.
ஏனென்றால் முஸ்லிம்கள் மதுவையும், மங்கையையும் நேசிப்பவர்களல்ல,
மாறாக மறுமையையும், மக்காவையும் நேசித்தவர்கள்..
இஹ்ராமுடையை ஆடையுடன் ஒருவர் இறந்துவிட்டால் அவர் லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக் என்றே மறுமையில் எழும்புவார்கள்.
Allahu Akbar
ReplyDeleteCorrect insha Allah bleave hujjaj
ReplyDeleteAllahu Akbar Kabera
ReplyDeleteலெப்பைக் அல்லாஹும்ம லெப்பைக்
ReplyDelete