Header Ads



வெலே சுதாவின் சகோதரர், போதை பொருளுடன் கைது

பிரபல ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரியான வெலே சுதாவின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் இன்று கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கம்பள விதானலாகே அசோக்குமார என்ற இந்த நபரை 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தெஹிவளை கவுடான வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட அசோக்குமாரவிடம் இருந்து 5.10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.