Header Ads



சவுதி அரேபியா பொய் சொல்கிறதா..?

கடந்த வாரம் மக்காவுக்கு அருகில் நிகழ்ந்த நெரிசலில் இறந்தவர்களின் எண்ணிக்கை சவூதி அரேபியா சொல்வதைவிட அதிகம் என நைஜீரியாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரான், இந்தியா, இந்தோனேஷியா நாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்கள் இந்த விபத்தில் அதிகம் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 769 பேர் இறந்துபோயுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சவூதியில் உள்ள பிணவறைகளைப் பார்வையிட்ட அந்த நைஜீரிய அதிகாரி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நெரிசலில் இறந்திருக்கலாம் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியாவைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளுக்குக்கூட சுமார் ஆயிரத்தி நூறு சடலங்களின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த விபத்து நடந்த பிறகு சவூதி அரேபியா நடந்துகொண்ட விதம் குறித்து விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த இந்த சர்ச்சை எழுந்துள்ளது. bbc

1 comment:

Powered by Blogger.