Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம், மைத்திரி + ரணில் அரசிலும் தொடருகிறது..!

-நஜீப் பின் கபூர்-

மஹிந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த அட்டகாசங்களைத் தாங்கிக் கொள்ள முடியாது, தமது ஒட்டு மொத்த வாக்குகளையும் மைத்திரி பக்கட்டில் கொண்டு போய்க் கொட்டினார்கள் முஸ்லிம்கள், ரணிலுக்கும் அப்படிய செய்து அதிகாரத்தில் அமர வைத்தார்கள் அவகள். 

ஆனால் நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது முஸ்லிம்கள் எதிர்பார்ப்பு வீண்போய்விட்டதோ என்று இப்போது அவர்கள் அங்கலாயிக்கின்ற நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது. 

முஸ்லிம்களுக்காக பேசுவதற்கு அதிக பிரதிநிதித்துவங்களைத் தாருங்கள்! எங்களுக்கு வாக்குகளைக் கொட்டுங்கள்! முஸ்லிம்கள் அதிக அளவில் அங்கு போய் நின்றாள்தான் பாதுகாப்பு என்று கதை சொன்ன நமது தலைவர்கள் பிரச்சினைகள் என்று வரும் போது மீண்டும் வழக்கம்போல் தலைமறைவாகி இருக்கின்றார்கள்.

இப்போது முஸ்லிம்களின் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுகின்ற காலம். அதற்காக அவர்கள் குர்பான் வேலைகளுக்காக ஈடுபட்டிருக்கின்ற பல இடங்களில் வழக்கம் போல் அதிகாரிகள் பொலிஸ் கெடுபிடிகள் நடந்திருப்பதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றது. 

இந்த முறைப்பாடுகளை நாம் மதிப்பீடு செய்து பார்த்த போது முஸ்லிம்கள் தரப்பில் முறையற்ற நடவடிக்கைகள் காரணமாக சில சம்பவங்கள் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு நல்ல உதாரணம் கொழும்பு சம்பவம்.

இன்னும் பல இடங்களில் முஸ்லிம்கள் சட்டரீதியாக இந்தக் காரியத்தைச் செய்ய ஆடு, மாடுகளை எடுத்து வந்த இடங்களில் மஹிந்த காலத்துப் பாணியில் அதிகாரிகளும் பொலிசாரும் நடந்து கொண்டுவருவது தெரிய வந்திருக்கின்றது.

நாம் அறிந்த வரை முஸ்லிம் விவகார அமைச்சர் நாட்டில் இருந்த போது இவ்வாறான முறைப்பாடுகள் விடயத்தில் தலையிட்ட போது கூட அவருக்கும் சட்ட ரீதியாகக் கொண்டு வந்த  மாடுகள் விடயத்தில் அலைக்களிக்கின்ற வேலைகளை அதிகாரிகள் பார்த்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. 

அமைச்சர் தற்போது நாட்டில் இல்லை. இன்றும் நாளையும் இந்த ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதில் முஸ்லிம்களுக்குக் கொடுக்கப்படும் தொந்தரவுகளுக்கு முகம் கொடுப்பவர்களுக்கு முஸ்லிம் விவகார அமைச்சர் எடுத்துள்ள மாற்று நடவடிக்கைகள் என்ன? 

முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஜம்மியத்துல் உலமா சபையும் இதற்குத் தருக்கின்ற பரிகாரம் என்ன?

5 comments:

  1. be patience and ask dua from allah mr najeeb. these people are not Angels

    ReplyDelete
  2. நாட்டில் நடக்கும் சகல பிரச்சினைக்கும் ஒரே காரணம் இந்த உலமா சபையின் போடு போக்கு தனம்தான்.தான் செவதும் இல்லை செய்யக்கூடியவர்களை விடுவதும் இல்லை.இந்த உலமா சபையை காலத்து வேறு நிருவாக உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.உலமா சபைக்கு சொந்த வேலை பார்க்க நேரம் போதாது அப்படி இருக்கும்போது எவ்வாறு பொது வேலை பார்ப்பது..எல்லாம் முடிந்தவுடன் அறிக்கை விடுவார்கள்

    ReplyDelete
  3. You do the wrong thing and expect the Minister to safe guard which will not happen like in the former regime.The Ulama also can't appear for you because the wrong will be on your side.
    Second point in this particular issue of slaughter be it Uluhiyya or other we are observing lot of wrong ways in handling animals and keep quite and when it ends up at legal Authorities we cant find fault on them.
    No one denies the right to practice our religion, but the problem is we are (or some of us) not grown enough to live in a multi religious/multi racial environment

    ReplyDelete
  4. Every thing will happen but no one will care about racism and politicians are deffs

    ReplyDelete
  5. is this news report or personal opinion? JM must consider before publishing personal related opinion news.
    Thanks JM

    ReplyDelete

Powered by Blogger.