சேயாவின் வீட்டுக்கருகில் பதற்றம் - குற்றவாளியின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு
கொட்டதெனிய பிரதேசத்தில் நேற்றிரவு முதல் கடுமையான பதற்றம் நிலவும் நிலையில், சிறுமி சேயாவின் படுகொலையுடன் தொடர்புடைய கொலையாளியின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கம்பஹா , கொட்டதெனிய பிரதேசத்தில் சிறுமி சேயா படுகொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் தற்போது குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து நேற்றிரவு அவர் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, படுகொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக தடயங்கள் சேகரிப்பு மற்றும் விசாரணை நடத்தப்பட இருந்தது.
இதுகுறித்து கேள்விப்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை தொடக்கம் படுகொலையான சிறுமி சேயாவின் வீட்டுக்கருகில் ஆவேசத்துடன் குழுமி நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களின் ஆவேசம் காரணமாக கொட்டதெனியாவில் பெரும் பதற்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், கொலையாளியின் வீட்டுக்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொலையாளியின் சகோதரி ஒருவர் அந்த வீட்டில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment