Header Ads



10 வயது சிறுவன் படுகொலை, 9 வயது சிறுமிக்கு நிர்வாண உடலை காட்டிய பொலிஸ் அதிகாரி

அத்துருகிரிய, கப்புறுகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயதுடைய சிறுவன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

இன்று காலை 11.10 மணியளவில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கொலை செய்யப்பட்ட சிறுவனின் கை, கால்கள் மற்றும் கழுத்து போன்ற பகுதிகள் வெவ்வேறாகும் அளவிற்கு கொடூரமான முறையில் இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் இடம்பெற்றபோது வீட்டில் யாரும் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிளது. 

சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சிறுவனின் தந்தை வீட்டில் இருந்துள்ளதுடன் சம்பவம் இடம்பெற்றவேளை தந்தை வீட்டில் இருக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

2..............

கட்டானை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு பயிற்சிக்காக வருகை தந்திருந்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தங்கும் விடுதிக்கு அருகே உள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமிக்கு நிர்வாணமாக உடலைக் காட்டிய சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் அந்த சிறுமி(09) தனது தாயிடம் கூறியதையடுத்து அயலவர்கள் சேர்ந்து குறித்த அதிகாரியைப் பிடித்து கட்டானை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இதனையடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய அதிகாரியை எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2 comments:

  1. நல்ல ஒழுக்கமான போலிசும் கண்ணியமான இராணுவமும் இலங்கையில்

    ReplyDelete
  2. This will continue nothing action will happen

    ReplyDelete

Powered by Blogger.