Header Ads



ஆயுதம் ஏந்தி போராட தயார் - ஞானசாரர் எச்சரிக்கை

தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஆயுதம் ஏந்திப் போராடவும் தமது அமைப்பு தயாராக இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கிருலப்பனையில் உள்ள பொதுபல சேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்ட கருத்தை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஞானசார தேரர், இந்த அரசாங்கம் சிறுபான்மையினரின் நலன்களில் காட்டும் கரிசனையில் சிறு அளவு கூட பெரும்பான்மையினர் குறித்து சிந்திப்பதில்லை.

இன்றைக்கு நல்லாட்சி, நல்லிணக்கம் குறித்து பேசிக்கொண்டு அமைச்சர்கள் கிறிஸ்தவ பாதிரிகளையும், இந்துக்குருக்களையும், முஸ்லிம் மௌலவிமாரையும் அழைத்து அமைச்சுக் காரியாலயங்களில் கூடிக்குலாவுகின்றனர். ஆனால் எங்களைக் கலந்து கொள்ளாமல் எந்தவொரு நல்லிணக்கமும் இந்த நாட்டில் சாத்தியப்படாது.

தொடர்ந்தும் இந்த அரசாங்கம் எங்களைப் புறக்கணித்துவிட்டு, சிறுபான்மை மக்களைத் தாலாட்டிக் கொண்டிருந்தால் நாங்கள் எங்களது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டோம் என்றும் எச்சரித்துள்ளார்.

4 comments:

  1. This person has a Big problem! Obviously mental illnes!

    ReplyDelete
  2. நித்திர கண் அரசாங்கத்துக்கு இன்னும் தெளிவு பெற காலம் வரவில்லையா இவனை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசாங்கம் ஏன் தயங்குவது ஆயுதம் தூக்குவோம் என்று சூளுரைக்கிறான் இன்னும் அவனுக்கு சலுகை கோடாபய ராஜபக்ஷவுக்கு வழங்கும் சலுகையால் இவனும் ஆடம்பரமாக நடக்கிறான் பொதுவாக அரசாங்கம் இவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்து கொண்டுதான் இருக்கிறது என்பது மட்டும் உண்மை காலம் பதில் சொல்லும்

    ReplyDelete
  3. சகோதரர்களே பிர்அவுனை அழித்த இறைவனிற்கு இவனை அழிப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை

    ReplyDelete
  4. Iwanai Sinhalese verukkintrenar

    ReplyDelete

Powered by Blogger.