Header Ads



இது என்ன கொடுமை..!


மெக்சிகோவில் வீடில்லாமல் தெருவோரத்தில் வசிக்கும் மக்களை விஷ ஊசி போட்டு கொல்ல வேண்டும் என நகர கவுன்சிலர் ஒருவர் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் ப்யூப்லா மாநிலத்தில் உள்ள நகரம் டெக்கமாச்சல்கோ (Tecamachalco).

இந்நகரத்தின் கவுன்சிலராக ஒல்கா கித்தேரஸ் மாக்கோரா(Olga Gutierrez Machorro) என்ற பெண் பதவி வகித்து வருகிறார்.

இவர் சமீபத்தில், நமக்கு தீங்கு விளைவிக்காத வீடிழந்தோருக்கு பரிவு காட்டி அவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக நாளிதழில் செய்தி வெளியானவுடன், ஒல்காவுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன.

இதனையடுத்து தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார், மேலும் சாலையோரம் வசிக்கும் மக்களில் சிலர் மனநல நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டு, அதற்கான சிகிச்சை என்ற பெயரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் முக்கியச் சாலையின் நடுவில் அடிபட்டுச் சாவதற்காக விடப்படுகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

இவர் நலிவடைந்த பிரிவினருக்கான ஆணையத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. When KIDS lived in comfort and luxary life, Come to power... this is how they think to solve problem of people and country;.

    That is why.. we need average person to rule country.

    ReplyDelete

Powered by Blogger.