கொலைகாரனுக்கு ஆதரவளிக்கும், கொலைக்கார பேச்சு..!
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், சிரியா அரசை பலவீனமடைய விடக் கூடாது என்று ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி வலியுறுத்தினார்.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்ற அவர் அங்கு செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
சிரியா அரசு பலவீனமடைவதை நாம் அனுமதிக்கக் கூடாது. அப்போதுதான் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அந்நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதைத் தடுக்க முடியும்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை அந்நாடு தொடர்ந்து நடத்த நாம் ஆதரவளிக்க வேண்டும். சிரியா அரசு இந்தப் போரில் தோற்றால் பயங்கரவாதிகள் அந்நாட்டைக் கைப்பற்றி விடுவார்கள். அதன்பின் பயங்கரவாதிகளின் புகலிடமாக சிரியா மாறிவிடும்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளைத் தோற்கடித்த பின், சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். சிரியா விவகாரத்தில் ஈரானும், ரஷியாவும் கிட்டத்தட்ட ஒரே கண்ணோட்டத்தில் உள்ளன. இரு நாடுகளுக்குமே பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதே பொதுவான இலக்காகும்.
சிரியா அதிபர் பஷார் அல் அஸாத் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் நிலைப்பாட்டை மேற்கத்திய நாடுகள் தற்போது கைவிட்டு விட்டன. அந்நாட்டில் பயங்கரவாதிகள் ஒடுக்கப்பட வேண்டும் என்பதற்கே அவை தற்போது முக்கியத்துவம் தருகின்றன என்று ஹசன் ரௌஹானி தெரிவித்தார்.
இதனிடையே, அவர் அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ""சிரியா அதிபர் பஷார் அல் அஸாத் தனது பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை தற்போது அனைத்து நாடுகளும் ஒப்புக் கொள்கின்றன என்றே கருதுகிறேன்'' என்றார்.
சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் 2.4 லட்சத்துக்கும் அதிகமானார் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக ஐரோப்பாவுக்குத் தப்பிச் சென்று விட்டனர்.
சிரியாவில் கணிசமான பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைத் தோற்கடிப்பதற்காக அந்நாட்டுக்கு தனது படையினரையும், போர் விமானங்களையும் ரஷியா அனுப்பி வைத்துள்ளது. இதன் மூலம் இந்தப் போர் முடிவடைந்த பிறகு சிரியாவின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் ரஷியா தனது கரத்தை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.
இதேபோல், ஈரானும் சிரியாவுக்கு நிதி உதவியையும் ராணுவ ரீதியிலான உதவிகளையும் அளித்து வருகிறது. ராணுவ ஆலோசகர்களையும் அந்நாட்டுக்கு ஈரான் அனுப்பி வைத்துள்ளது.

SIYA KILLING OUR ENTIRE MUSLIMS IN THE WORLD WITH ISRAIL
ReplyDeleteமுதலில் இந்த சியாக்கள் முஸ்லிம் இல்லை என்பதை முஸ்லிம்கள் மத்தியில் விதிக்க வேண்டும் எவ்வாறு காபீர்களை நாம் கையாள்கிறோமோ அந்த கண்ணோட்டத்துக்கு முஸ்லிம்களின் மன நிலையை கொண்டுவரவேண்டும்.தெளிவாக தெரிகிறது சியாக்கள் முஸ்லிம் இல்லை என்பது.அதன் பின்னுன் ஏன் இந்த சமரசம்.
ReplyDeleteஅப்பாவி மக்கள் முற்றாக அழிந்தாலும் பிரட்சனையில்லை உங்க லெட்சியப்பயனம் நிரைவாகனும் எஞ்சியிருக்கும் உயிர்கலாவது காப்பாற்றப்படவேனும் எனும் கருசனைப்பேச்சு கிடையாது உங்களயெல்லாம் ஆட்சியாலனா ஏற்றமக்கள்தான் இதை சிந்திக்கவேனும்
ReplyDelete