Header Ads



ஒழுக்கவியல் பண்பாட்டு, முன்னேற்றம் சம்பந்தமான கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஏற்பாடு செய்த இளைஞர் யுவதிகளின் ஒழுக்கவியல் பண்பாட்டு முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலொன்று மாலை குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கிண்ணியா மஜ்லிசுல் சூரா தௌஹீத் ஜமாஅத் ஜமாஅத்துஸ் ஸலாமா ஜமாஅதே இஸ்லாமி போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இளைஞர்களின் பண்பாட்டு ஒழுக்கவியல் வீழ்ச்சி தொடர்பாக இதன்போது கலந்துரையாடப் பட்டது. இதற்கான காரணங்கள் சில அடையாளம் காணப்பட்டு இதனை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்வைக்கப்பட்டன. 

அரசியல் சக்தியைப் பயன்படுத்தி செய்யப்பட வேண்டியவை சமய அமைப்புகளால் செய்யப்பட வேண்டியவை என அடையாளம் காணப்பட்ட இவ்வேலைத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதெனவும் அடிக்கடி மீள் கலந்துரையாடல்களை நடத்தி முன்னேற்றங்கள் பற்றிக் கலந்துரையாடுவதெனவும் இங்கு தீர்மானம். எட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.