Header Ads



தாமதமாகிய ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ், ஏன் தெரியுமா..?


விமானிகளுக்கான பைலட் அனுமதிப்பத்திரத்தை வீட்டில் வைத்துவிட்டு வந்த விமானியின் செயல் காரணமாக லண்டன் விமானம் சில நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

லண்டன் செல்வதற்கான ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏற்றப்பட்ட நிலையில், அதன் பிரதான விமானியை விமானத்துக்கு அழைத்துச் செல்ல விமான நிலைய ஊழியர்கள் விமானியின் ஓய்வறைக்கு சென்றுள்ளனர்.

அப்போதுதான் விமானிக்கு தான் பைலட் அனுமதிப்பத்திரத்தை எடுத்துவராத விடயம் தெரியவந்துள்ளது. உடனடியாக அவரது வீட்டுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு பைலட் அனுமதிப்பத்திரம் எடுத்து வரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விமானம் சுமார் 16 நிமிடங்கள் தாமதமாக ரன்வேயிலிருந்து கிளம்பியுள்ளது. இது ஸ்ரீ லங்கன் விமானசேவைக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தற்போது விமானிக்கு எதிரான உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 comment:

  1. இது அவரது மறதியா..? பொறுப்பின்மையா..? அல்லது இரண்டுமா..? எதுவானாலும் நல்லதல்ல.

    ReplyDelete

Powered by Blogger.