Header Ads



உண்ணாவிரதத்திற்கு தயாராகும் முஸ்லிம் மாணவியும், தந்தையும்..!

-Aliyar Thajahan -

பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரியில் அண்மையில் அதிபர் அவர்களினால் பல்வேறுபட்ட தகாத வார்த்தைப் பிரயோகத்தினாலும்,மாணவிக்கான பரிட்சை அனுமதியட்டை மறுக்கப்பட்ட விடயம் தொடர்பாகவும் குறித்த மாணவியும், பெற்றோரும் நீதியினை நாடி கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரை நாடிய பொழுதும் இதுவரை உரிய அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்? என பெற்றோர்கள் ஆதங்கம் அடைகின்றனர்.

குறித்த மாணவிக்காக வேண்டி நீதியினை பெற்றுக்கொடுப்பதுடன் சம்மந்தப்பட்ட அதிபரை உடனடியாக இடமாற்றம் செய்வதுடன், மேல்மட்ட விசாரணையினையும் நடத்துவதற்கான முயற்சியினை எடுப்பதற்காக வேண்டி நேற்றிரவு பொத்துவிலில் (29) ஒன்றுகூடல் இடம்பெற்றது.

இவ்வொன்றுகூடலில் பொத்துவில் அல்இர்பான் மகளிர் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பாதிப்படைந்த பிள்ளையின் பெற்றோர், ஊரின் முக்கியஸ்தர்கள் பிரசன்னமாயினர். 

இங்கு கருத்து தெரிவித்த பாதிப்படைந்த மாணவியின் தந்தை ஹமிட் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்:

என்னுடைய பிள்ளைக்கு இவ் அநீதி இடம்பெற்றுள்ளது இதனை நீங்கள் உடனடியாக பக்கச்சார்பின்றி நீதியினை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு நல்க முன்வாருங்கள்.எனது மகளுக்கு மகளிர் கல்லூரி அதிபர் தகாத வார்த்தையினால் ஏசிய ஒலிப்பேழை இணையத்தளங்களில் உலாவருகின்றது. இதனை மேல்மட்டங்கள் பார்க்க வில்லையா? எனது மகள் தற்கொலை செய்வதாக கூறி வருகின்றாள் அவ்வாறு நடந்தால் முழுப்பொறுப்பையும் தகாத வார்த்தைகளினால் ஏசிப்பேசியவரும் எனது மகளுக்கு அனுமதியட்டை வழங்காத அதிபருமான கமறுதீன் அவர்கள்தான் பொறுப்புக்கூற வேண்டும். நான் ஓர் ஏழை என்பதனால்தான் இப்படி எனக்கு நடந்திருக்கின்றது. 

ஒரு கிழமைக்குள் சட்ட நடவடிக்கை எடுப்பதாக மாகாணக் கல்வித்திணைக்களம் கூறியிருந்தும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் சரியான நீதி கிடைக்காவிட்டால் நானும் எனது மகளும் உண்ணாவிரதம் இருப்பதற்கு முடிவெடுத்துள்ளோம். இனிமேல் கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு மாணவியும் இவ்வாறு அதிபர்களினால் பாதிப்படைய கூடாது என்றார்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பாடசாலையின் அபிவிருத்திச்சங்க உறுப்பினர் அபுல் கருத்து தெரிவிக்கையில் குறித்த அதிபரை விசாரணை செய்வதற்கு நாங்கள் எத்தணித்த பொழுதும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தை ஒன்றுகூட்டாமல் அதிபருக்கு சார்பான ஆசிரியர்களையும், சங்கத்தின் ஒரு சில உறுப்பினர்களையும் வைத்துக்கொண்டு கூட்டங்கள் நடத்துகின்றார். எங்களுக்கு அழைப்பு வருவதில்லை. இன்று இவரின் மாணவி பாதிப்படைந்ததைப்போல் நாளை எந்த மாணவியும் பாதிப்படையக்கூடாது ஆகவே உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஒத்துழைப்பு நல்கும். என்றார். 

அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சர் தண்டாயுதபாணி இவ்விடயத்தில் பக்கச்சார்பின்றி நடவடிக்கையெடுப்பதற்கு முன்வருமாறும் கேட்டுக்கொண்டார்கள்.

3 comments:

  1. இப்போதல்லாம் கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களால் அன்பளிப்பாக வழங்கப்படும் விரால் கருவாடு,சுங்கான் கருவாடு,தேன் போத்தல்களுக்குத்தான் வேலை செய்வது வழக்கம்.அதனால்தான் இவ்வாறான ஏழைகள் கடுமையாக பாதிப்படைகின்றார்கள்.

    ReplyDelete
  2. Bro Hameed! Heatiest condolence to you and your daughter in this regard.
    If your daughter is saying she is going to suicide you need advice her about Islam and its stance on suicide.
    Ask dua from allah.
    " there is no barrier between a victims dua and allah " hadeeth
    So allah Will never make his prophet a liar. You can firmly believe in above hadeeth seek assistance from allah.
    In sha allah he will make things easier.
    Aameen

    ReplyDelete
  3. There are many psychiatric principals and educational officers in Sri Lanka especially in the Eastern province. So they should be advised well or to be sent compulsory pension.

    ReplyDelete

Powered by Blogger.