Header Ads



அனாதைகளை அரவணைக்க 'இப்றாஹீம் சிறுவர் இல்லம்' அள்ளித் தாருங்கள் என்கிறது தவ்ஹீத் ஜமாத்

அன்பிற்கினிய எம் கொள்கைச் சகோதர சகோதரர்களே! பாசமிகு அன்பர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ...

ஒரு சமுதாயத்தின் அசைக்க முடியாத வளம் இளம் பரம்பரை. இவர்கள் சீராக நெறிப்படுத்தப்படும் போது ஒரு சமுதாயம் எழுச்சிப் பாதையில் பயணிக்க முடியும்.

இலங்கையில் அண்மைக் காலமாய் பெற்றோரை இழந்த அநாதைச் சிறார்களினதும், வறுமை நிமித்தம் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளினதும், விவாகரத்து மற்றும் முறையற்ற தொடர்புகளினால் கைவிடப்பட்ட சிறார்களினதும் எண்ணிக்கை எகிறிக் கொண்டு வருகின்றமை முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டிய அம்சமாகும். 

இவ்வாறு ஏதோ ஒரு காரணத்தினால் தனிமைப் படுத்தப்பட்டு தாயன்பு கிடைக்காது தவிக்கும் குழந்தைகளுக்கான சிறுவர் ஆதரவு இல்லங்கள் இலங்கை நாட்டில் பல இயங்கிக் கொண்டுதான் உள்ளன. ஆனால், இவற்றில் அதிகமானவை மாற்று மத ஸ்தாபனங்களினால் வழி நடாத்தப்படுபவை ஆகும். முஸ்லிம் சமூகத்திற்கென்று விரல் விட்டு எண்ணக் கூடிய ஓரிரு சிறுவர் காப்பகங்கள் இருந்த போதிலும் அவர்களுக்கு அத்தியவசியமான தாயன்பு கசியும் கணிவான அரவணைப்பும், வாழ்வை வளப்படுத்த உதவும் மார்க்க அடிப்படைக் கல்வியும் முறையாக வழங்கப்படுவதில்லை. 

இந்நிலையை கருத்திற் கொண்ட ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இவ்வாறு சமூகத் தளத்திருந்து ஓரம் கட்டப்படும் சிறார்களை முறையான கவணிப்புடனும் தெளிந்த இஸ்லாமிய பயிற்சிப் பட்டரையுடனும் வார்த்தெடுத்து மார்க்கத்திற்கும் சமூகத்திற்கும் பயன் மிக்க நற்பிரஜைகளாக உருவாக்கும் நன்னோக்கில் இச்சிறுவர் ஆதரவு இல்லம் ஆரம்பிக்கப்படவுள்ளது, இன்ஷா அல்லாஹ்.

அத்தோடு அநாதை இல்லம் என்ற வார்த்தை கூட அப்பிஞ்சு உள்ளங்களில் நெறுடலை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக வழமையான பாணியில் இருந்து சற்று விலகி இப்றாஹீம் சிறுவர் ஆதரவு இல்லம் என்ற பெயரை இதற்கு சூட்டியுள்ளோம்.

அன்பும் அரவனைப்பும் இன்றி நட்டாற்றில் அனாதைகளாய் அவதிப்படும் அபலை சிறார்களின் கண்ணீர் துடைத்து, தாயன்பு சிந்தும் காப்பரணாய் மாறி, இஸ்லாத்தின் ஒழுக்க விழுமியங்களின் அடிப்படையில் வாழும் இளம் பரம்பரையினை வார்த்தெடுக்கும்  நன்னோக்கில் ‘இப்றாஹிம் சிறுவர் ஆதரவு இல்லம்’ ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் வரகாபொலை நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான கட்டுமாணப் பணிகள் தற்போது மும்முரமாக நடந்தவண்ணம் உள்ளது.

மேற்படி செயற்திட்டத்தினை நடாத்துவதற்கு பாரிய அளவில் நிதி எமக்குத் தேவைப்படுகிறது. ஏலவே, பல காத்திரமான செயற்திட்டங்களை எமது ஜமாஅத் முன்னெடுத்து வருகின்றமை தாங்கள் அறிந்ததே! எம்மால் முன்னெடுக்கப்படும் அனைத்து சன்மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளும் எந்தவொரு வெளிநாட்டு நிதி நிறுவனங்களினதோ, அரசினதோ எவ்வித உதவியும் இன்றி, பொது மக்களின் தர்மப்பணத்திலிருந்து மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

காலத்தின் அவசியமாய் உள்ள இப்பணி கச்சிதமாய் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் பொது மக்களாகிய உங்களின் உதவிகள் எம் ஜமாஅத்திற்கு பெரிதும் அவசியப்படுகிறது. கொள்கை பிடிப்புள்ள, சத்தியத்தை சுமந்து செல்லும் அழைப்பாளர்களாய் நாளைய சிறார்களை உருவாக்கும் இந்நற்பணிக்கு, தயாள உள்ளம் கொண்ட, பரோபகாரத் தன்மையுடைய, மறுமையின் நிலையான சுவன வெகுமதிகளின் மீது அதீத ஆசையுள்ள ஒவ்வொரு கொள்கைவாத அன்பர்களும் உங்கள் பொருளாளும் பணத்தாலும் எமது ஜமாஅத்தினால் மேற்கொள்ளப்படும் இந்நற்பணிகளுக்கு வாரி வாரி அள்ளிக் கொடுக்குமாறு வாஞ்சையோடு வேண்டிக் கொள்கின்றோம்.

“ஆனால், நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும்.” அல்குர்ஆன் (87 : 17)

இப்படிக்கு,

  M.T.M.பர்ஸான் – துணைத்தலைவர்

உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய கணக்கிலக்கம்
SRI LANKA THAWHEED JAMAATH
HATTON NATIONAL BANK
MARADANA BRANCH
A/C NO: 108010104971

தொடர்புகளுக்கு
0767077517, 0774781472



No comments

Powered by Blogger.