'மகிந்தவை, ரணில் பாதுகாக்கமாட்டார்'
ஐக்கிய நாடுகளும் அமெரிக்காவும் இலங்கையை தற்போது வெள்ளையடிப்பு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இதன் விளைவாகவே அமெரிக்காவின் யோசனை தொடர்பில் சீனாவும் ரஸ்யாவும் விடுத்த எச்சரிக்கையை இலங்கை உதாசீனம் செய்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள அவர், அமெரிக்காவினதும் ஐக்கிய நாடுகளினதும் நிபந்தனைகளை அரசாங்கம், ஏன் ஏற்றுக்கொண்டது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்க கூறுவதைப் போன்று அரசாங்கம் மஹிந்த ராஜபக்சவை பாதுகாக்காது என்று தாம் நினைப்பதாக கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

Why we have to save him...?
ReplyDelete