Header Ads



வசீம் தாஜுடீன் பயணித்த வாகனத்தின் பாகமும் காணாமல் போனது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ரக்பீ வீரர் வசீம் தாஜுடீன் பயணித்த வாகனத்தின் பாகமும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பாக மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸிற்கு எழுத்துமூலம் தெரிவித்துள்ளது. தாஜுடீனின் KQ-6543 என்ற இலக்கத்தகடு பொருத்தப்பட்ட வாகனம் தொடர்பில் அறிக்கை ஒன்றை மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் நீதிமன்றம் கோரியிருந்தது.

இதற்கமைய 6 பக்கங்களைக் கொண்ட அறிக்கை நேற்று சமர்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் சில பாகங்கள் தீக்கிரையாகியிருப்பதோடு, சாரதி அமரும் ஆசனம் அதிகபட்சமாக தாழ்வடைந்திருந்தாத நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதிலுடன் மோதியதாக கூறப்படுகின்ற தாஜுடீனின் வாகனத்தின் முன்பக்கத்தில் சிறிய பகுதிகளே சேதமடைந்திருக்கக்கூடும். அந்த வகையில் சில பகுதிகள் சேதடைந்துள்ளன.

இந்த விபத்தினால் சாரதிக்கு உயிராபத்து ஏற்படும் வகையில் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜே.ஏ.என். ஜயவீர நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். இதேவேளை ரக்பீ வீரர் தாஜுடீனின் சடலத்தின் சில பகுதிகள் பரிசோதனையின் பின்னர் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த வேளை மாயமாகியிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையிலேயே அவர் பயணித்த வாகனத்தின் சில பாகங்களும் தற்போது மாயமாகியுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது.

வசீம் தாஜுடீன் கடந்த 2012ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டி – சாலிகா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மதிலுடன் மோதுண்டு தீக்கிரையான காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. No justice for Muslim only majority race

    ReplyDelete
  2. Nambitoom election short drama ithu nanamaruku velanga late

    ReplyDelete
  3. Previous regime culprits are being protected!

    ReplyDelete
  4. "அரசன் அன்று காக்கும், தெய்வம் நின்று காக்கும்" என்பார்கள்.
    அல்லாஹ் இடமிருந்து தக்க தருணத்தில் தண்டனைகள் இறங்கும் போது இவர்களுக்கும் உதவியவர்களுக்கும் விளங்கும்.

    ReplyDelete
  5. It's election drama now everything over. This case also soon will over.any way we remain only God will funish. That's all.inshahallah.

    ReplyDelete
  6. Defineatly ALLAH will punish them.world rules can protect them but allah never give.insha allah

    ReplyDelete

Powered by Blogger.