Header Ads



ஆசனத்தில் அமர மறுத்த மகிந்த

மகிந்த ராஜபக்சவுக்கு நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் வழங்கப்பட்ட போதிலும் அவர் அதில் அமராது வேறு ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

சபைக்குள் மகிந்த ராஜபக்ச சென்ற போது எதிர்க்கட்சியின்  ஆசனங்களில் அமர்ந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்றதுடன் அவரை எதிர்க்கட்சி ஆசனங்களின் முன்வரிசைக்கு அழைத்துச் சென்றனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, மகிந்த ராஜபக்சவின் கைகளை பிடித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துடன் அவருக்கு முன்வரிசை ஆசனம் ஒன்றை காட்டினார்.

துமிந்த திஸாநாயக்கவின் முதுகில் தட்டிய மகிந்த ஆசனத்தை நோக்கி நடந்து சென்றார். மகிந்தவை கண்டதும் ஆசனத்தில் இருந்து எழுந்த நிமால் சிறிபால டி சில்வா, எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமருமாறு கேட்டுக்கொண்டார்.

எனினும் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்திற்கு அருகில் உள்ள ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

2 comments:

  1. நீயே உனக்குத் தேடிக்கொண்டது மகனே! ஆப்பிழுத்த குரங்கின் கதை தான் ஞாபகம் வருகிறது.

    ReplyDelete
  2. அவருக்கு இன்னும் ஜனாதிபதி நினைப்பு

    ReplyDelete

Powered by Blogger.