சீதனம் விவகாரத்தில் ஜம்மியத்துல உலமா, தலையிடாமல் இருப்பது ஏன்..?
இலங்கை வரலாற்றில் அகில இலங்கை ஜம்யதுல் உலமாவின் பழைமை மிக்க வரலாறும் கணிசமான அளவில் பிரபலமானதாகவே உள்ளது. பல தசாப்தங்களாக முஸ்லிம்களின் ஒரு பொறுப்பு வாய்ந்த சிவில் அமைப்பு என்றால் மிகையாகாது.முஸ்லிம்களுக்கு பல தரப்பட்ட மார்க்க ரீதியான சேவைகளை செய்து வந்தாலும் சமுகத்தை கடுமையாக பாதிப்படையச்செய்த கைக்கூலி சீதனம் போன்ற ஏழைகள் பாதிக்கப்படும் விடயங்களில் கவனம் செலுத்தியது மிகக்குறைவாகவே உள்ளது.
பலதரப்பட்ட தலைப்புகளில் காலத்துக்குகாலம் பல சன்மார்க்க போதனைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கேடு கெட்ட சீதனம் கைக்கூலி என்ற கொடிய சமூக நோய் பற்றி பேசிய தலைப்புகள் மிகக்குறைவு என்றே சொல்ல வேண்டும்.இதற்க்கு காரணம் படித்தவர்களிடத்திலும் அதிகமான மார்க்க அறிஞர்கள் இடத்திலும் இந்த தொற்று நோய் பரவி இருப்பதால் இந்த தலைப்பில் பேசுவதற்கு யாரும் பெரிதளவில் விரும்புவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
இதன் விளைவுதான் வயது வந்த பெண்களும் இளம் யுவதிகளும் மத்திய கிழக்கு நாடுகள் போன்ற நாடுகளுக்கு தொழில் தேடி போக வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாக வேண்டிய அவல நிலை ஏற்ப்பட்டு பல சமூக சீரழிவுகள் ஏற்ப்பட்டுவிட காரணமாக உள்ளது.ஒரு பெண் வெளி நாடு வந்து ஏதாவது ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்யும்போது அந்த வீட்டில் சிலபல பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்ப்படும்போது யாராவது ஒரு சொந்த நாட்டு ஆணின் பாதுகாப்பில் போய் சேர வேண்டிய அவல நிலைக்குள்ளாகி பல பிரச்சனைகளை சந்தித்து மார்க்கம் அனுமதிக்காத ஹராமான விடயங்களில் ஈடுபடும் அவலநிலை ஏற்ப்படுகிறது.சொந்த நாட்டில் பத்தினியாக வாழ்ந்த பெண்கள் காலத்தின் கட்டாயத்தால் ஒரு விபச்சாரியாகும் பரிதாப நிலையை காணக்கூடியதாக இருக்கிறது.
இவ்வாறு இவர்களின் கெட்ட நடத்தைகளால் உருவாகும் கருத்தரிப்பு, அதனையும் கருக்கலைப்பு செய்வது அல்லது நாட்டுக்கு வந்து பிரசவத்தின் பின் அந்த தப்பான வழியில் பெற்றடுத்த குழந்தைகளை கொலை செய்து விடுவது அல்லது ஏதாவது பாதை ஓரத்தில் போட்டுச்செல்வது இதுபோன்ற இன்னும் பல விடயங்கள் உட்பட றிசான ரபிக்கின் மரண தண்டனை வரை சென்றுள்ளது .இந்த விடையம் தெரியாத யாரும் இல்லை.ஆனால் தெரியாதது போல் நடந்துகொள்ளும் நம் மமூதாய வழிகாட்டிகளான மார்க்க அறிஞர்கள் வாய் திறந்து பேச முடியாமல் விழுங்கி விழுங்கி இருக்கிறார்கள்.இவ்வாறு கொலை செய்யப்படும் குழந்தைகளை அல்லாஹ் கியாமத்து நாளில் எழுப்பி நீ ஏன் கொலை செய்யப்பட்டாய் என்று கேட்கும்போது அதன் பதில் என்னவாக இருக்கும்.அதன் பதிலுக்கு நம்முடைய பதில்என்னவாக இருக்கும்..
உண்மையிலேயே இந்த உலமாக்களும் சீதனம் வாங்கும் ஆண்களும் என்ன பதில் சொல்வார்கள்.நம்நாட்டில் பல ஊர்களில் பள்ளி வசூல் கொடுக்கவில்லை என்றால்,பள்ளி நிர்வாகத்துக்கு கட்டுப்பட வில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கும் பள்ளிவாசல்களின் தர்மகர்த்தாக்கள் ஏன் இந்த சீதனம் என்னும் கொடிய புற்று நோயை கட்டுப்படுத்த முன்வராமல் இருப்பது.போராட்டம் நடத்த முன்வராமல் இருப்பது.மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மாவட்டத்துக்கு மாவட்டம் ஊருக்கு ஊர் உலமா சபையின் கிளைகளை அமைத்து இருக்கும் அதே வேளை அந்த கிளைகளின் ஊடாக கைக்கூலி சீதனம் எதிப்பு பேரணி,சீதன ஆதனத்தின் கொடுமைகள் பற்றி விழிப்புணர்வு மாநாடு நடத்தாமல்இருப்பது .ஏன்?
இந்த உலமா சபை மாவட்டம் தோறும் சகல பள்ளிவாசல் நிருவாகிகள்,மாவட்டத்தில் உள்ள உலமாக்கள்,ஆசிரியர்கள்,புத்தி ஜீவிகளை அழைத்து மாவட்டத்துக்கு ஒரு மாநாடு நடத்தினால் என்ன?இவ்வாறான விடயங்களில் ஈடுபடாமல் இருப்பதன் மறுமம் என்ன?நோன்பு ஆரம்பத்துக்கும்,நோன்பு பெருநாளைக்கும் ,ஹஜ் பெருநாளைக்கும் முஸ்லிம்களின் தலைமை உலமா சபைதான் என்று காட்டிக்கொள்வதோடு முடிந்து விடுகிறது. .குறைந்தது இளம் வயதில் உள்ள உலமாக்கள் வாங்கும் கைக்கூலி சீதனத்தையாவது குறைக்க முடியுமான எந்த நடவடிக்கைகூட எடுக்கப்படவில்லை..இவர்கள்கூட பள்ளிவாசல்களில் ஜமா அத்தார்களிடம் சொல்லாமல் பள்ளிவாசல் புத்தகங்களில் எழுதாமல் இரகசியமாக பல இலட்சங்களை பெண் வீட்டாரிடம் வாங்கிக்கொண்டு திருமணம் செய்யும் காட்ச்சிகளை பார்க்ககூடியதாக இருக்கிறது.
இதுபோதாமல் இவர்களுக்கு தரமான மோட்டார் சைக்கிள்களும் கொடுக்க வேண்டும் வீடும் கொடுக்க வேண்டும்.இல்லாத ஏழைகளை கசைக்கி புளியும் இந்த கொடுமையை பார்த்துக்கொண்டு இருக்கும் உலமா சபை உண்மையாக சொல்லப்போனால் இதுவரையும் உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

Vatti.seethanam.vipacharam enbadhu payngara pavangal.ithai acju mattum nippata mudiyathu
ReplyDeleteSeedana pirachinai adutha maahanaggalaiwida kilakku maahanattulayea adiham.aanal aggu walvadu adiham Muslims payar konda .....
ReplyDeletestill dawri is written in the marriage certificate
ReplyDeleteulama s witness for it make dua. quran is teaching to give mahar but some one include dowri in the marriage certificate. who is responsible for this? I am looking for the answer if this is sariha? where is the ulama & fatwa.
marriage certificate still include dawri is this shariha? need reply from ulamas.
ReplyDeleteAbsolutely correct I agree with you. Some of spineless men are getting dawri even some ulama
Deleteஇப்பொழுது யாரும் அவ்வளவாக சீதனம் வாங்குறார்கள் இல்லை. கிழக்கு மாகாணத்து ஜம்மிய்யதுல் உலமாவின் உலமாக்கள் மாத்திரம் தான் வாங்கிறார்கள். அவர்களுக்கு குறைந்தது ஓரு பைக் அல்லது ஒரு ஆட்டோ ரிக்ஷோ வாங்கிக் கொடுக்க வோண்டும்.
ReplyDeleteMost of the ulamas have taken dowry and they don't feel it as sin...
ReplyDelete