Header Ads



மகிந்த ராஜபக்ஸவின் முறைகேடுகள் குறித்து, பொதுமக்களும் முறையிடலாம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முறைகேடுகள் மற்றும் ஊழல் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் சாட்சியங்களைக் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாரிய முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட மஹிந்தவின் தேர்தல் விளம்பரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட முறைகேடான செயற்பாடுகள் காரணமாக சுமார் இரண்டு கோடி ரூபா அந்த நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும் இதுகுறித்து வாக்குமூலம் அளித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பு என்றும் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று நிராகரித்திருந்தார்.

இந்நிலையில் மஹிந்தவின் முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்கள் சாட்சியங்களை கோர ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

1 comment:

  1. ஏற்க்கனவே மஹிந்த ராஜபக்செட தலை முடி அளவுக்கு குற்றம் இருக்கு அதைப்பற்றி விசரஈக்க இன்னும் அரசாங்கத்துக்கு முடியவில்லை.அதை விடுத்து பொதுமக்கள் என்ன முறைப்பாடு செய்ய வேண்டியுள்ளது

    ReplyDelete

Powered by Blogger.