பொதுபல சேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது - ஞானசார
நல்லாட்சி அரசாங்கம் சிங்கள பௌத்தாகளை உதாசீனம் செய்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை மக்களின் நலன்களை உறுதி செய்வதில் அர்ப்பணிப்பை காண்பிக்கும் போதும், பெரும்பான்மை சமூகத்தை கண்டு கொள்வதில்லை.
மதகுருக்கள் அமைச்சர்களாக பதவியேற்கும் வித்தியாசமான நாடாக இலங்கை மாற்றமடைந்துள்ளது.
எமது அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தாது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது.
குளிரூட்டப்பட்ட அறைகளில் அமைச்சர்களின் தோள்களில் கைபோட்டு சம்பாசனை செய்யும் பௌத்தப பிக்குகளுடன் நல்லிணக்கம் பற்றி பேசுவது நகைப்பிற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
கிருலப்பனை போதி மந்திரயவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

வெகுசரியாகச் சொன்னீர்கள் தேரரே!
ReplyDeleteஉண்மை உங்கள் வாயாலேயே வந்துவிட்டது. நாட்டில் நல்லாட்சி அரும்புவதற்குத் தடையாக இருப்பதே நீங்கள்தான் என்று வாக்குமூலம் தருகின்றீர்கள். அது உண்மையோ அல்லது உங்களது விருப்பமோ எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கட்டும்.
எனக்கென்னவோ கிழட்டுச் சிங்கம் ஒன்று கர்ஜிப்பதற்கு முயற்சி செய்துவிட்டு கடைசியில் 'மியாவ்' என்று கத்தியது போலுள்ளது!
என்ன கண்டு பிடிப்பு இன்னமும் உம்மை விட்டு வைத்திருக்கின்றார்களே என நினைக்கும் போது நல்லாட்சியை நினைத்து உள்ளம் பூரிப்படைகின்றது
ReplyDeleteபோதுபல சேனாவை தடை செய்யாமல் பேச்சு வார்த்தை நடத்துவதில் பிரயோசனம் இல்லை.ஏன் இன்னும் இந்த அரசாங்கம் இவர்களை விட்டு வைத்து இருக்கிறது மஹிந்த போதுபல சேனா என்னும் மரத்தை நாட்டி வைத்தார் மைத்திரி உரம் இட்டு நீர் ஊற்ற வளர்க்கிறாரா.புதிய அரசாங்கம் வந்து ஒரு வருடமாக போகின்றது இதுவரையும் ஜனாதிபதி இந்த இனத்துவேச பல சேனா பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லைஇதன் மருமம் என்ன
ReplyDeleteEvery day u bow bow no use
ReplyDeleteFirst the government must eradicate BBS for country's reconciliation
ReplyDeleteGod gifts will reach you soon bbs
ReplyDeleteLion to cat. Now cat to rat.
ReplyDelete