தொகுதிவாரி முறையில் உள்ளூராட்சித் தேர்தல் - மனோ கணேசன்
தொகுதி வாரி முறையின் கீழ் உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் என தேசிய கலந்துரையாடால்கள் அமைச்சர் மனோ கணேசன் இன்று (29.9.2015) எம்முடன் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
நாம் அவரிடம் தொடர்ந்தும் விடுத்து வரும் கோரிக்கைகளில் ஒன்றான ஆராட்சிக்கட்டுவ பிரதேச சபையின் கீழ் வரும் உடப்பு மற்றும் ஆண்டிமுன கிராமங்களுக்கு தொகுதி வாரி முறையின் கீழ் தலா ஒரு உறுப்பினர் வீதம் தெரிவாவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் எம்மிடம் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக இவ்விரு கிராமங்களுக்கும் ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படும் வகையில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகள் நிர்ணயம் தொடர்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய சிபாரிசை முன்வைக்கும் முகமாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவில் அமைச்சர் மனோ கணேசனும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது கோரிக்கைய பெருமனதுடன் பரிசீலித்த அமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள்.
சமூக ஆர்வலர்

Post a Comment