Header Ads



3 இலட்சம் பேர் வெள்ளத்தினால் பாதிப்பு - 4 மாவட்டங்கள் வரட்சியினால் அவதி

மாவட்டங்கள் பலவற்றிற்கு ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக 89 ஆயிரத்து 868 குடும்பங்களை சேர்ந்த 3 லட்சத்து 12 ஆயிரத்து 620க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

இதில் 9 மாவட்டங்கள் சீரற்ற காலநிலை காரணமாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்ட மக்கள் வரட்சி காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கிங் மற்றும் நில்வளா ஆகிய கங்கைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக தாழ் நிலங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

No comments

Powered by Blogger.